அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களை வணக்கம் போட வைத்த தனுஷ்.. களைகட்டிய ‘தி கிரே மேன்’ புரமோஷன்!
சென்னை: மும்பையில் நேற்று நடைபெற்ற தி கிரே மேன் படத்தின் ப்ரீமியர் ஷோ நிகழ்ச்சியில் வேட்டி சட்டை அணிந்து கொண்டு தமிழர்களின் பெருமையை உலகத்திற்கு எடுத்துக் காட்டி இருந்தார் நடிகர் தனுஷ்.
Recommended Video
ஹாலிவுட்டில் நடந்த தி கிரேமேன் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கு தனது மகன்களுடன் கோட் சூட் அணிந்து கலந்து கொண்ட தனுஷ், மும்பையில் நடந்த விழாவில் வேட்டி சட்டையில் கலக்கி இருந்தார்.
அதுமட்டுமின்றி, தி கிரேமேன் படத்தின் இயக்குநர்களான ரூசோ சகோதரர்களை வணக்கம் வைக்கச் சொல்லி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

நெட்பிளிக்ஸில் வெளியாகும் தி கிரேமேன்
மார்வெல் திரையுலகில் பல பிரம்மிக்க வைக்கும் படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் கிறிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங், தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள தி கிரே மேன் ஜூலை 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சமீபத்தில் அதன் ப்ரீமியர் ஹாலிவுட்டில் நடைபெற்ற நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்றது.

வேட்டி சட்டையில் தனுஷ்
வெள்ளை வேட்டி, சட்டையில் நடிகர் தனுஷ் மும்பையில் நடந்த தி கிரேமேன் ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்டார். பல பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தி கிரேமேன் பட இயக்குநர்கள் ரூசோ சகோதரர்களும் பங்கேற்றனர். தனுஷ் வேட்டி சட்டையில் கலந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலகளவில் டிரெண்டாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.

வணக்கம் வைத்த ரூசோ சகோதரர்கள்
இந்நிலையில், தற்போது அதை விட செம மாஸான ஒரு புகைப்படத்தை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உலகளவில் டிரெண்டாக்கி உள்ளார். அவெஞ்சர்ஸ், தி கிரேமேன் படங்களின் இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் தனுஷ் உடன் இணைந்து அழகாக வணக்கம் வைக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் பெருமை
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான ரூசோ சகோதரர்களை வணக்கம் போட வைத்த தனுஷ் தமிழ் சினிமா மற்றும் தமிழர்களின் பெருமை என ரசிகர்களும் பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர். நாளை நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள தி கிரேமேன் திரைப்படம் எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்புகளுடன் தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











