சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து.. 'எஸ்-3' மோஷன் போஸ்டர் வெளியீடு
சென்னை: சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக 'எஸ்-3' மோஷன் போஸ்டர் நள்ளிரவில் வெளியிடப்பட்டது.
சூர்யா - ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகமான எஸ்-3 உருவாகி வருகிறது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

வருகிற டிசம்பர் 16-ந் தேதி இப்படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை மோஷான் போஸ்டர் மூலமாக வெளியிட்டுள்ளனர். தீபாவளிக்கு சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த மோஷன் போஸ்டர் நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications