பொம்மை பட டிரைலரை பாப்புலர் ஆக்க எஸ்.ஜே.சூர்யா என்ன செய்ய போகிறார் தெரியுமா ?
சென்னை : தான் நடித்துள்ள பொம்மை படத்தின் டிரைலரை பாப்புலர் ஆக்க வேண்டும் என்பதற்காக எஸ்.ஜே.சூர்யா செய்ய போகிற காரியம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படி ஒரு ப்ரொமோஷனை எதிர்பார்க்கவில்லை என அனைவரும் வியப்பாக கூறி வருகின்றனர்.
டைரக்டராக அறிமுகமாகி நாயகனாகவும் உயர்ந்து வளர்ந்து வருபவர் எஸ்.ஜே.சூர்யா. ஹீரோ நடிப்பை தொடர்ந்து, விஜய் நடித்த "மெர்சல்" படத்தில் வில்லனாக தோன்றி அசத்தினார். அதனை தொடர்ந்து "மாநாடு" படத்தின் ஹிட் இவரை மாஸ் ஸ்டார் ஆக உயர்த்தியது. இப்பொழுது சிவகார்த்திகேயன் உடன் நடித்த "டான்" படம் மூலம் குழந்தைகள், வாலிபர்கள், பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஃபேவரைட் நடிகராகி விட்டார்.

இந்நிலையில் நேற்று, "மொழி" , 'அபியும் நானும்' படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த டைரக்டர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த "பொம்மை' படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. 2020 ம் ஆண்டே துவங்கப்பட்ட இந்த படம் பல காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராதா மோகன் இணைந்து தயாரித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜ் இசையமைத்துள்ளார்.
ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரியா பவானிசங்கர் லீட் ரோலில் நடித்துள்ளார். மான்ஸ்டர் படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவுடன் பிரியா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் இது. இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை Think Music வாங்கி உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ள பொம்மை டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவின் "பொம்மை" பட டிரைலர் உலகம் முழுக்க சுமார் 600 திரை அரங்குகளில் வெளியாகிறது. கமல்ஹாசன் , லோகேஷ் கனகராஜ் உருவாக்கத்தில் உருவான "விக்ரம்" படம் வெளியாகும் திரை அரங்குகளில் ஜூன் - 3 ஆம் தேதி "பொம்மை" படத்தின் டிரைலர் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் சிங்கள் டிராக் வெளியீடு, பாடல்கள் வெளியீடு, பட வெளியீடு குறித்த செய்திகள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











