எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை டிரைலர்... நல்லா இருக்கு...ஆனா...?

சென்னை : எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஹீரோவாக நடித்துள்ள பொம்மை படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்து விட்டு ரசிகர்கள் தங்களின் கமெண்ட்களை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்தடுத்து தொடர்ந்து சூப்பர் ஹிட்களை கொடுத்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. ஸ்பைடர் படத்தில் வில்லனாக அறிமுகமானவர், தற்போது நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார். விஜய்யுடன் மெர்சல், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, சிலம்பரசனுடன் மாநாடு, சிவகார்த்திகேயனுடன் டான் என வரிசையாக பிளாக பஸ்டர் படங்களைக் கொடுத்து வருகிறார்.

மீண்டும் ஹீரோவான எஸ்.ஜே.சூர்யா

மீண்டும் ஹீரோவான எஸ்.ஜே.சூர்யா

வில்லனாக கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அப்படி ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் தான் பொம்மை. 2020 ம் ஆண்டே துவங்கப்பட்ட இந்த படம் பல காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராதா மோகன் இணைந்து தயாரித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜ் இசையமைத்துள்ளார்.

பொம்மை டிரைலர் ரிலீஸ்

பொம்மை டிரைலர் ரிலீஸ்

பிரியா பவானிசங்கர் லீட் ரோலில் நடித்துள்ளார். மான்ஸ்டர் படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவுடன் பிரியா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் இது. இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை Think Music வாங்கி உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. கலர்ஃபுல்லாக, ரொமான்டிக் த்ரில்லராக இந்த டிரைலரும் அமைக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்டே இது தான்

ஹைலைட்டே இது தான்

எஸ்.ஜே.சூர்யா எக்ஸ்பிரஷனில் பின்னி எடுத்து உள்ளார். பிரியா பவானிசங்கர், நிஜமாகவே அழகான பொம்மை தான். அவரை விட்டு கண்ணை திருப்பவே முடியவில்லை. கிட்டதட்ட சைகோ த்ரில்லர் கதையாக படம் இருக்கலாம் என காட்டுகிறது. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல் மற்றும் போக்கிரவுண்ட் மியூசிக் செமயாக உள்ளது. டிரைலரின் ஹைலைட்டே ஒளிப்பதிவு தான். சான்சே இல்லை. அந்த அளவிற்கு அழகாக காட்டி உள்ளார்.

டிரைலர் எப்படி இருக்கு

டிரைலர் எப்படி இருக்கு

எல்லா் நல்லா தான் இருக்கு. ஆனால், டிரைலரில் வரும் காட்சிகளை பார்க்கும் போது காதல் கொண்டேன், குடைக்குள் மழை, அன்பே ஆருயிரே, இன்னும் சில படங்களின் காட்சிகளை பார்ப்பது போன்ற உணர்வே வருகிறது. பல காட்சிகளை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று தான் கேட்க வைக்கிறது. அதிலும் மொத்தமாக பொம்மைகளை வைத்திருப்பதை பார்த்தால் எந்திரன் படத்தை உல்டா பண்ணியிருக்கிறார்களா என கேட்க தோன்றுகிறது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பிற்காக பார்க்கலாம் என்று தான் பெரும்பாலானவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X