நவம்பர் 24 தான்டா தீபாவளி...மாநாடு பற்றிய எஸ்ஜே சூர்யா சொன்ன பகீர் தகவல்
சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அரசியல், த்ரில்லர், சயின்ஸ் ஃபிக்சன் படம் மாநாடு. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்தில் போலீஸ் அதிகாரி ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

தள்ளிபோன மாநாடு ரிலீஸ்
தீபாவளி ரிலீசாக நவம்பர் 4 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதனால் ரஜினியின் அண்ணாத்த படத்துடன், சிம்புவின் மாநாடு மோத போகிறது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 25 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது தான் காரணமா
அண்ணாத்த படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவதால் மாநாடு படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாம். இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்தால் அது இரு படங்களின் வசூலையும் பாதிக்கும், தியேட்டர் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்வளவு கஷ்டமா
இந்நிலையில் மாநாடு படத்தின் டப்பிங் வேலைகளை முடிக்க தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மாநாடு படத்தில் எனது பகுதி டப்பிங் பேசுவதற்காக 8 நாட்கள் ஒதுக்கப்பட்டது. இதை 5 நாட்களில் முடித்தேன். நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தண்டுவடம், தொண்டை என அனைத்தும் போய் விட்டது. அதற்கு பிறகு குறைந்தபட்சம் 10 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டேன்.

நவம்பர் 25 தான்டா தீபாவளி
கடுமையான உழைப்பு. வலி பின்னுது. ஆனால் பிறகு அவுட் புட் பார்த்தப்போ வலி அனைத்தும் காணாமல் போய் விட்டது. நீங்கள் எல்லோருமே சொல்லுவீங்க...நவம்பர் 25 தான்டா தீபாவளின்னு என குறிப்பிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகளுக்கே எஸ்.ஜே.சூர்யா இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காரா என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஹிட்டான வசனம்
சமீபத்தில் வெளியிடப்பட்ட மாநாடு படத்தின் டிரைலரில், வந்தான்...சுட்டான்...செத்தான். ரிப்பீட்டு. என தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா பேசிய வசனம் அனைவரையும் கவர்ந்தது. இதற்காகவே இந்த டிரைலர் செம ஹிட் ஆனது.


Click it and Unblock the Notifications











