என்னது நாளை முதல் தீபாவளியா... அட்வான்ஸ் வாழ்த்து பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா

சென்னை : டைரக்டர், நடிகர் என இரண்டிலும் வெற்றி பெற்றவர் எஸ்.ஜே.சூர்யா. ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யா, பிறகு வில்லன் ரோல்களில் நடிக்க துவங்கினார். வில்லனாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

தற்போது, மான்ஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் கடமையை செய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். வில்லன், ஹீரோ என ஒரே சமயத்தில் இரு மாறுபட்ட ரோல்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.

 எஸ்.ஜே.சூர்யாவின் மாஸ் டையலாக்

எஸ்.ஜே.சூர்யாவின் மாஸ் டையலாக்

சமீபத்தில் டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக போலீஸ் ஆபீசர் ரோலில் நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தின் முதல் டிரைலரில் எஸ்.ஜே.சூர்யா பேசிய, வந்தான்...சுட்டான்...செத்தான், ரிப்பீட்டு என ஃபாஸ்ட் மோடில் எஸ்.ஜே.சூர்யா பேசிய டையலாக் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தள்ளி போகும் ரிலீஸ்

தள்ளி போகும் ரிலீஸ்

ஆனால் மாநாடு படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளி போய் கொண்டிருக்கிறது. மே மாதமே ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட இந்த படம், தொடர்ந்து பலமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பலமுறை எதிர்பார்க்கப்பட்டு, தீபாவளி நாளான நவம்பர் 4 அன்று ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதை ரசிகர்கள் கொண்டாடினர்.

பின்வாங்கிய மாநாடு

பின்வாங்கிய மாநாடு

ரஜினியின் அண்ணாத்த படத்துடன், சிம்புவின் மாநாடு மோத உள்ளதாக சோஷியல் மீடியாவில் உற்சாகமாக கூறி வந்தனர். சூப்பர் ஸ்டார் படத்தை விட மாநாடு படம் அதிகம் வசூலாகும் என கூறி வந்தனர் ரசிகர்கள். ஆனால் ஒரே நாளில் இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்தால் அது வசூலை பாதிக்கும், தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் கடைசி நேரத்தில் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கியது மாநாடு.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

நவம்பர் 4 ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25 ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. மாநாடு படத்திற்கு சென்சார் போர்டும் யு/ஏ சான்று வழங்கியது. ஆனாலும் ரிலீஸ் தேதி பற்றி படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. இருந்தாலும் நவம்பர் 27 ம் தேதி மாநாடு ரிலீசாக உள்ளதாக ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்டது.

அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்து

அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்து

தமிழ், மலையாளம், இந்திய உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. டிக்கெட் புக்கிங் ஒரு பக்கம் நடந்து வந்தாலும், மாநாடு ரிலீஸ் 25 ஆ அல்லது 27 ஆ என ரசிகர்கள் குழம்பிப் போயினர். இந்நிலையில் படத்தின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள். உண்மையான கொண்டாட்டத்தை கொண்டாட உங்கள் டிக்கெட்டை புக் செய்யுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

நாளை ரிலீஸ் கன்ஃபார்ம்

நாளை ரிலீஸ் கன்ஃபார்ம்

அதோடு, உலகம் முழுவதும் நாளை முதல் திரையரங்குகளில் தீபாவளி என்ற வாசகத்துடனான மாநாடு படத்தின் போஸ்டர் ஒன்றையும் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் இந்த பதிவை டைரக்டர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரம் ரீட்வீட் செய்துள்ளனர். இதனால் நாளை நவம்பர் 25 மாநாடு படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X