மிஷ்கின் இயக்கும் இரண்டு ஹீரோ படத்தில் எஸ்.ஜே.சூர்யா
சென்னை : த்ரில்லிங்கான படம் எடுப்பதில் கை தேர்ந்தவர் டைரக்டர் மிஷ்கின். சைகோ உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி கண்டவர் மிஷ்கின்.
இவர் சமீபத்தில் தான் பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். முற்றிலும் பேய் படமான இதில் ஆண்டிரியா லீட் ரோலில் நடித்துள்ளார். இவருடன் பூர்ணா, விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை முருகானந்தன், ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட் பேனரில் தயாரித்துள்ளார்.

பிசாசு 2 படத்தில் ஆண்டிரியா பேய் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்திற்கு ஒரு காட்சியில் ஆண்டிரியா நிர்வாணமாகவும் நடித்துள்ளாராம். ஆண்டிரியாவின் இந்த துணிச்சலான முடிவு, ஆண்டிரியா நிர்வாணமாக நடித்துள்ள காட்சிகளை படமாக்கிய விதம் குறித்து மிஷ்கின் கூறி உள்ள விஷயங்கள் படத்தின் மீதான ஆர்வத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.
பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கிய விதம் முருகானந்தத்தை பெரிதும் ஈர்த்து விட்டதாம். இதனால் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தையும் தானே தயாரிப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளார். இதே போன்று மற்றொரு படத்தை இயக்க வேண்டும் எனவும் மிஷ்கினிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
பிசாசு 2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் இரண்டு ஹீரோக்கள் கதையாம். இந்த படத்தில் ஒரு ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யாவும், மற்றொரு ஹீரோவாக விதார்த்தும் நடிக்க உள்ளனராம். இந்த மாத இறுதியில் மற்ற நடிகர், நடிகைகள், படக்குழு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்பட உள்ளனவாம்.
மிஷ்கின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் முதல் படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே சமயம் பிசாசு 2 படம் முற்றிலும் பேய் படமாக இயக்கி உள்ள மிஷ்கினின் அடுத்த படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யா தற்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் மாநாடு, டான் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும், கடமையை செய் உள்ளிட்ட படங்களில் ஹீரோ ரோலிலும் நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன் என ஒரே சமயத்தில் இரு வேறுபட்ட ரோல்களில் நடித்து வருவதால் எஸ்.ஜே.சூர்யா படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











