»   »  ஏ.ஆர்.முருகதாஸால் தனுஷ் படத்தை தவறவிட்ட எஸ்.ஜே.சூர்யா

ஏ.ஆர்.முருகதாஸால் தனுஷ் படத்தை தவறவிட்ட எஸ்.ஜே.சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.

குஷி, வாலி படங்களின் மூலம் விஜய், அஜீத்தின் மார்க்கெட்டை உயர்த்தியதில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு கணிசமான பங்குண்டு.

S.J.Surya Plays Villain in Mahesh Babu's Next

தொடர்ந்து ஹீரோ ஆசையால் படங்கள் இயக்குவதை குறைத்துக் கொண்ட எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜின் இறைவியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இப்படத்தில் மகேஷ்பாபுவை மிரட்டும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.

மகேஷ்பாபுவிற்கு வில்லனாக நடித்தாலும் மற்றொருபுறம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தீராத வருத்தமொன்று இருக்கிறதாம்.

அதாவது மகேஷ்பாபு படத்தால் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை அவர் தவற விட்டிருக்கிறார்.

இதுதான் எஸ்.ஜே.சூர்யாவின் வருத்தத்திற்கு காரணமாம். மகேஷ்பாபு-முருகதாஸ் படம் ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
S.J.Surya Plays a Villain in Mahesh Babu's next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil