»   »  பாகுபலி பாணி சரித்திரக் கதையை கையில் எடுக்கும் ஜனநாதன்

பாகுபலி பாணி சரித்திரக் கதையை கையில் எடுக்கும் ஜனநாதன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் குறிப்பிடத் தகுந்த இயக்குனர்களில் எஸ்.பி.ஜனநாதனும் ஒருவர், அவரது படங்கள் எல்லாமே சமூகத்தின் மீது அக்கறையைக் காட்டும் ரகங்களைச் சேர்ந்தவையாகவே இருக்கும்.

அந்த வகையில் அவரது அடுத்த படம் சரித்திரத் தொடர்பான ஒரு வரலாற்றுக் கதையாக இருக்கும் என்று கூறியுள்ளார், பாகுபலி வெற்றியால் நிறைய இயக்குனர்கள் தற்போது சரித்திரப் படங்களின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

அந்த வகையில் இயக்குநர் ஜனநாதனும் தனது ஆசையை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சரித்திரப் படம் ஒன்றை இயக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இயற்கை

இயற்கை

ஷாம் நடித்த இயற்கை படத்தின் மூலம் இயக்குனராக 2003 ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான எஸ்.பி.ஜனநாதன், முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர்.

இயற்கை தொடங்கி புறம்போக்கு வரை

இயற்கை தொடங்கி புறம்போக்கு வரை

இயக்குனராக இந்த 13 வருடங்களில் இயற்கை, ஈ, பேராண்மை மற்றும் புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை என மொத்தம் 4 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். இவரது படங்களில் சமூக அக்கறையும் கலந்தே இருக்கும், என்பது இவரது தனிச்சிறப்பு.

பல ஆண்டுகள் ஆராய்ச்சி

பல ஆண்டுகள் ஆராய்ச்சி

ஜனநாதன் பல ஆண்டுகளாகவே சரித்திரக் கதைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார், ஆனால் சரித்திரக்கதையை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா படம் வெற்றிபெறுமா?என்ற சந்தேகம் அவருக்கு இருந்துள்ளது. தற்போது பாகுபலியின் வெற்றியைப் பார்த்த பின்னர் சரித்திரப் படத்தின் மீது ஜனநாதனுக்கு நம்பிக்கை வந்துள்ளது.

தஞ்சையின் வரலாறு

தஞ்சையின் வரலாறு

ஜனநாதன் எடுக்க இருக்கும் சரித்திரத் திரைப்படம் தஞ்சை பெரிய கோயிலைப் பற்றியதாம், தஞ்சை பெரிய கோயில் மற்றும் அதன் உண்மையான வரலாற்றை எடுத்துக் கூறும் படமாக இந்தப் படம் அமையும் என்று கூறி இருக்கிறார். மேலும் தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக எனது படம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பட்ஜெட் 200 கோடி

பட்ஜெட் 200 கோடி

படத்தை எடுத்து முடிக்க சில ஆண்டுகள் ஆகும், இந்தப் படத்தின் பட்ஜெட் 200 கோடி வரை இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். தமிழில் தஞ்சை பெரியகோயிலைப் பற்றிய படம் என்பது கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது, பாகுபலியின் தாக்கம் பலரின் மனக்கதவுகளைத் திறந்து வருகிறது போல.

வேகமா படத்தை ஆரம்பிங்க சார்..

சரித்திரப் படம்

சரித்திரப் படம்

சமீபத்தில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற பாகுபலி திரைப்படத்தைப் பார்த்த ஜனநாதன் அடுத்ததாக சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட, ஒரு படத்தை இயக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

English summary
Director S.P.Jananathan Says "Next I will be directing a historical film.’

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil