பாகுபலி 3 வருமா?வராதா?...ராஜமெளலி என்ன சொல்கிறார் தெரியுமா?

சென்னை : எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரம்மாண்ட வரலாற்று படைப்பாக உள்ளது. இதுவரை வெளிவந்த இரண்டு பாகங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன.

பாகுபலி ரிலீசான சமயத்தில் இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது. அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது மட்டுமல்ல உலக அளவில் அதிக வசூலை குவித்த படமும் பாகுபலி தான். தெலுங்கில் மட்டுமின்றி வெளியிடப்பட்ட அத்தனை மொழிகளிலும் பிளாக்பஸ்டர் வெற்றியை பாகுபலியின் இரண்டு பாகங்களும் பெற்றன.

 பாதியில் கைவிடப்பட்ட பாகுபலி

பாதியில் கைவிடப்பட்ட பாகுபலி

பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து அனிமேடட் நெட்ஃபிளிக்ஸ், கிளாஃபிக்ஸ் நாவல் சீரிஸ், லைவ் ஆக்ஷன் வெப் சீரிஸ் என பல வடிவங்களிலும் பாகுபலி உருவாக்கப்பட்டது. பாகுபலியின் தொடர்ச்சியாக ஓடிடி தொடராக ரைசிஸ் ஆஃப் சிவகாமி உள்ளிட்ட பல கதைகளை இயக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பிறகு அவை பாதியிலேயே கை விடப்பட்டது.

பாகுபலி 3க்காக காத்திருக்கும் ரசிகர்கள்

பாகுபலி 3க்காக காத்திருக்கும் ரசிகர்கள்

இதனால் பாகுபலியின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவருமா என ரசிகர்கள் கேட்டு வந்தனர். பாகுபலி 3 எடுக்கப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பாகுபலி தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் இதுவரை தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர். ஆனால் பாகுபலியின் அடுத்த பாகத்தை ராஜமெளலி இயக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.

பாகுபலி 3 வருமா?வராதா?

பாகுபலி 3 வருமா?வராதா?

இது பற்றி சமீபத்தில் பேட்டி அளித்த ராஜமெளலியிடமே கேட்கப்பட்டது. பாகுபலி 3 வருமா என கேட்டதற்கு பதிலளித்த ராஜமெளலி, பாகுபலியின் மற்றொரு பகுதியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அதற்காக தயாரிப்பாளர் ஷோபுயார்லகட்டாவுடன் ஆலோசித்து, அதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்ந்து வருகிறேன். பாகுபலியை சுற்றி பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. நாங்ள் பல வழிகளை ஆராய்ந்து வருகிறோம். அதற்கு சிறிது காலம் ஆகும். ஆனால், பாகுபலி பற்றிய சில அற்புதமான அறிவிப்புக்கள் உரிய நேரத்தில் வெளியாகும் என்றார்.

 பிரபாஸ் நடிப்பாரா?

பிரபாஸ் நடிப்பாரா?

பாகுபலி இரண்டு பாகங்களில் நடித்த பிரபாஸ் தற்போது பான் இந்தியன் நடிகராகி, பல மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருவதால் பாகுபலி 3 உருவானால் அதில் பிரபாஸ் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. ராதே ஷ்யாம் ப்ரொமோஷனின் போது இது பற்றிய பிரபாசிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர், பாகுபலி எப்போதுமே என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. அது ஏற்படுத்திய தாக்கத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது. பாகுபலியின் 3 ம் பாகம் உருவாகுமா என உறுதியாக தெரியாது. அதில் நான் நடிப்பது தயாரிப்பாளர் கையில் தான் உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X