தியேட்டர் தெறிக்கும்...அசத்தலான அனல் பறக்கும் ஆர்ஆர்ஆர் க்ளிம்ப்ஸ்

ஐதராபாத் : பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி உள்ள படம் ஆர்ஆர்ஆர். பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட்டுள்ள ரெளத்திரம் ரணம் ருத்ரம் படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, ஆலிசன் டூடி, ராய் ஸ்டீவன்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜயேந்திர பிரசாத் கதை எழுதி உள்ளார். கீரவானி இசையமைத்துள்ளார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மெகா பட்ஜெட் படம்

மெகா பட்ஜெட் படம்

1920 களில் நடப்பது போன்று சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்த்து போரிட்ட ஐதராபாத் நிஜாம் பற்றிய கதை இது. தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ள ஆர்ஆர்ஆர் படம் 2020 ம் ஆண்டு ஜுலை 30 ம் தேதி ரிலீஸ் செய்யவே முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா, லாக்டவுன் காரணமாக படத்தின் வேலைகள் தாமதமாகின.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் ஜனவரி 7 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடப்பதாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. நட்பை மையப்படுத்தி இந்த கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அசத்தலான க்ளிம்ப்ஸ்

அசத்தலான க்ளிம்ப்ஸ்

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் 45 விநாடிகள் கொண்ட க்ளிம்ப்ஸ் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜுனியர் என்டிஆர், ராம் சரணின் வேற லெவல் அதிரடி ஆக்ஷன், எமோஷனல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வழக்கம் போல் இந்த படத்திலும் ராஜமெளலி மிரட்டி உள்ளார் என்பது தெரிகிறது.

இது தான் கதையா

இது தான் கதையா

ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஆலியா பட், அழகிய புடவையில் கண்ணீருடன் காட்சி தருகிறார். கோமரம் பீம், அலூரி என்ற இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களுடன் சண்டையிடும் காட்சிகள் இந்த க்ளிம்ப்சில் இடம்பெற்றுள்ளன. இந்த வீரர்களின் வாழ்க்கையை முழுவதுமாக படித்து, ஆராய்ந்த பிறகு இந்த படத்தை எடுக்க துவங்கி உள்ளார் ராஜமெளலி.

டயலாக்கே இல்லை

டயலாக்கே இல்லை

அதிரடி ஆக்ஷன் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்த க்ளிம்ப்ஸில் டயலாக் இல்லாமல் இருப்பது சிறிது ஏமாற்றத்தை அளித்துள்ளது. VFX சூப்பர்விஷன் முறையில் ஸ்ரீநிவாஸ் மோகன் இந்த படத்தை படமாக்கி உள்ளார். சிங்கம் சீறிப் பாய்ந்துக் கொண்டு வருவதாக க்ளிம்ப்சின் இறுதியில் காட்டப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X