twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சங்க விவகாரம்... ஸாரி கேட்ட எஸ்.வி.சேகர்

    By Manjula
    |

    சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றாலும், இன்னும் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை.

    ஒருபக்கம் நடிகை ராதிகா கடுமையாக விஷாலைத் தாக்கிக் கொண்டிருக்கிறார், மற்றொருபுறம் இயக்குனரும் நடிகருமான எஸ்.வி.சேகர் சரத்குமார் அணியை விடுவதாக இல்லை.

    S.V.Sekar says Sorry on Facebook

    இந்தத் தேர்தலில் சரத்குமார் அணி தோல்வி அடைந்ததும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நாசரும் விஷாலும் சிரித்துக்கொண்டிருக்கிற மாதிரி ஒரு புகைப்படத்தையும் பக்கத்திலேயே சரத்குமாரும், விஜயகுமாரும் அழுதுகொண்டிருக்கிற ஒரு புகைப்படத்தையும் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

    இருவரும் அழுகின்ற அந்தப் புகைப்படம் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா மறைவின்போது எடுக்கப்பட்டதாம் இது தெரியாமல் எஸ்.வி.சேகர் அதனைப் பதிவிட அப்புறமென்ன வழக்கம் போல வலைதளவாசிகள் தவறை தங்கள் பாணியில் சுட்டிக் காட்டினர்.

    நேற்று இரவு திரு சரத் அவர்களும் திரு விஜய குமார் அவர்களும் அழும் புகைப்படம் எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது என தெரியாமல் ...

    Posted by SVe Shekher on Tuesday, October 20, 2015

    இதனை அறிந்த எஸ்.வி.சேகர் உடனடியாக அந்தப் புகைப்படத்தை நீக்கியிருக்கிறார் மேலும் "நேற்று இரவு திரு சரத் அவர்களும் திரு விஜயகுமார் அவர்களும் அழும் புகைப்படம் எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது என தெரியாமல் பதிவிட்டு விட்டேன். தெரிந்த உடன் நீக்கி விட்டேன். என் தவறுக்கு வருந்துகின்றேன்".

    என்று நீண்டதொரு விளக்கத்தை அளித்திருக்கிறார் தனது பேஸ்புக் பக்கத்தில் அளித்திருக்கிறார். இது தொடர்பான விவகாரத்தில் தற்போது எஸ்.வி.சேகருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் பேஸ்புக் பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    Director with Actor S.V.Sekar Yesterday Night Upload some Picture in Facebook, Now He is removing this Picture And says Sorry for all.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X