»   »  இனி தமிழகத்தில் எந்த நுழைவுத்தேர்வும் கிடையாது, அனைவருக்கும் அரசு வேலை: எஸ்.வி. சேகர் நக்கல்

இனி தமிழகத்தில் எந்த நுழைவுத்தேர்வும் கிடையாது, அனைவருக்கும் அரசு வேலை: எஸ்.வி. சேகர் நக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் நுழைவுத்தேர்வை எதிர்ப்பதை கிண்டல் செய்வது போன்று ட்வீட் போட்ட நடிகர் எஸ்.வி. சேகரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

நீட் அனிதாவை கொன்றுவிட்டது என்று கூறி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. நீட்டுக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ்.வி. சேகர் நுழைவுத்தேர்வு குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நுழைவுத்தேர்வு

இனி தமிழகத்தில் எதிலும் எந்த நுழைவுத்தேர்வும் கிடையாது. அனைவருக்கும் அரசு வேலை.ஆபீஸ் வரவேண்டாம். சம்பளம் வீடு தேடி வரும். மகிழ்ச்சிதானே. 🇮🇳😜

பேங்க்

எப்படி சார் எல்லார் பேங்க் அக்கவுண்ட்லயும் 15 லட்சம் கிரிடிட் பண்ணிய மாதிரியா என ஒருவர் எஸ்.வி. சேகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிண்டல்

உங்களுக்கு மக்களின் ஆதங்கம் கிண்டலாக தெரிகிறதா . கிராமத்து லா இருந்து படிஞ்சி வந்து பாருங்க தெரியும் மாணவர்களின் கஷ்டம் . 😡

தேர்தல்

இனி தமிழகத்தில் எதிலும் எந்த தேர்தலும் கிடையாது.அனைவருக்கும் மந்திரி பதவி கிம்பலம் வீடு தேடி வரும் மகிழ்ச்சி தானே .

அநியாயம்

நுழைவுத்தேர்வு நியாயமா பொதுவா இருந்து எதிர்த்தா இப்படி பேசலாம் ஆனால் அநியாயமா நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்கு இந்த வக்காளத்து ஒரு கேடா

English summary
Actor turned politician S.Ve. Shekher has made fun of people who protest against the entrance exams.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X