»   »  ரஜினி பற்றி இப்படி பொசுக்குன்னு ட்வீட் போட்ட எஸ்.வி. சேகர்

ரஜினி பற்றி இப்படி பொசுக்குன்னு ட்வீட் போட்ட எஸ்.வி. சேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் ட்வீட்டியுள்ளார்.

சூப்பர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்துள்ளார். இதை கேட்டு ரஜினி ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஜெயிப்பது

அன்றய ஓட்டப்பந்தய வீராங்கனை தங்க மங்கை P T USHA இன்று ஓடினால் ஜெயிப்பது என்பது⁉️ என்று தெரிவித்துள்ளார்.

ஆதரவு

ஒருவரை இவ்வளவு வெறுப்பதை நான் பார்த்தது இல்லை. இதனால் அவரை ஆதரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆன்லைன் மற்றும் நிஜத்திற்கு இடையே வித்தியாசம் உள்ளது என்று ஒருவர் கமெண்ட் போட்டார்.

நிஜம்

இது வெறுப்பு அல்ல. நான் நிஜத்தை பேசுகிறேன். மற்றவை கடவுளின் கையில் என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி. சேகர்.

நினைவு இருக்கா?

எஸ்.வி. சேகரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் சார், இந்த ட்வீட் ஞாபகம் இருக்கா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Actor cum BJP functionary S. Ve. Shekher has tweeted about Rajinikanth's political entry. Rajini fans got angry after seeing his tweet having doubt about Rajini.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X