»   »  நல்லூர்,தூத்துக்குடியைத் தொடர்ந்து ஆந்திராவுக்கு 'டிரான்ஸ்பரான' துரைசிங்கம்

நல்லூர்,தூத்துக்குடியைத் தொடர்ந்து ஆந்திராவுக்கு 'டிரான்ஸ்பரான' துரைசிங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து சிங்கம் 3யில் தற்போது சூர்யா நடித்து வருகிறார்.

இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் இருவரும் நடித்து வருகின்றனர். முதல் 2 பாகங்களில் இருந்த ராதாரவி, விவேக், நாசர் இந்தப் பாகத்திலும் தொடர்கின்றனர்.

இதுதவிர கிரிஷ், ரோபோ சங்கர், சூரி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் சிங்கம் 3யில் புதிதாக இணைந்திருக்கின்றனர்.

நல்லூர்

நல்லூர்

முதல் பாகத்தில் துரை சிங்கம்(சூர்யா) தூத்துக்குடி மாவட்டம் நல்லூரில் எஸ்ஐயாக இருப்பார். இவரது காவல்நிலையத்துக்கு வரும் பெரும்பாலான வழக்குகளில் இவரே தீர்ப்பு சொல்லி நீதிமன்றத்தின் வேலைப்பளுவை குறைத்து வருவார்.ஒரு கட்டத்தில் சென்னையின் பிரபல ரவுடியான மயில் வாகனத்திற்கும்(பிரகாஷ் ராஜ்) இவருக்கும் மோதல் ஏற்பட புரமோஷன் என்ற பெயரில் நல்லூரிலிருந்து சென்னைக்கு துரைசிங்கம் தூக்கியடிக்கப்படுவார். சென்னை ரவுடிகளை துரை சிங்கம் களையெடுப்பது தான் சிங்கம் படத்தின் கதை.

தூத்துக்குடி

தூத்துக்குடி

சிங்கம் 2 வில் தூத்துக்குடி மாவட்டத்தின் கடத்தல்களைக் கண்டறியும் அண்டர்கவர் போலீஸ் அதிகாரியாக, துரைசிங்கத்திற்கு பதவி உயர்வு கிடைக்கும். கடத்தல்காரர்களைக் கண்டறியும் துரைசிங்கம், எடுத்துக்கொண்ட பணியை முடிப்பதற்காக ஆப்பிரிக்கா வரை சென்று எதிரிகளை அழித்து வெற்றிவாகை சூடுவார்.

ஆந்திரா

ஆந்திரா

தற்போது உருவாகிவரும் 3 வது பாகத்தில் துரைசிங்கம் ஆந்திராவுக்கு டிரான்ஸ்பராகி செல்வது போல ஹரி கதை அமைத்திருக்கிறாராம். இதனால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆந்திராவிலேயே படம்பிடித்து வருகின்றனர். நல்லூர், தூத்துக்குடியைத் தொடர்ந்து ஆந்திரா ரவுடிகளை துரைசிங்கம் அழிப்பதுதான் சிங்கம் 3யின் கதை என்கின்றனர்.

தெலுங்கிலும்

தெலுங்கிலும்

தெலுங்கிலும் சூர்யாவிற்கு நல்ல மார்க்கெட் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டுதான், சூர்யா ஆந்திராவிற்கு வருவதுபோல ஹரி கதையை அமைத்திருக்கிறார். 2 வது பாகத்தில் ஹன்சிகா கொல்லப்பட்டதன் காரணம், சூர்யா-அனுஷ்காவுக்கு திருமணம் நடந்ததா?, ஸ்ருதி ஹாசன் என்ன வேடத்தில் நடிக்கிறார் போன்ற முக்கியமான கேள்விகளுக்கான பதிலை இந்தப் பாகத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

எனினும் பதில் தெரியாத கேள்வி ஒன்றும் உள்ளது. சிங்கம்-3 யுடன் துரைசிங்கத்தின் வேட்டை முடியுமா?

    English summary
    Sources Said Surya-Hari's S3 Movie Story Based on Andhra Pradesh.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil