»   »  மக்கள்கிட்ட டப்பு லேது... சூர்யாவின் எஸ் 3 மீண்டும் தள்ளிப் போனது!

மக்கள்கிட்ட டப்பு லேது... சூர்யாவின் எஸ் 3 மீண்டும் தள்ளிப் போனது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரதமர் மோடியின் பண ஒழிப்பு அறிவிப்பு காரணமாக கையில் காசின்றி மக்கள் தவித்து வருவதால், கடந்த ஒரு மாதமாக பல படங்கள் தள்ளிப் போய் விட்டன. மீறி வெளியான படங்களும் போதிய வசூலின்றி தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

பணத் தட்டுப்பாட்டால் தள்ளிப் போன படங்களின் வரிசையில் இப்போது சூர்யாவின் சிங்கம் 3-ம் இணைந்துள்ளது.

S3 postponed again

இந்தப் படம் தீபாவளிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நவம்பர் இறுதி வாரம் வெளியாகும் என்றார்கள். ஆனால் மோடியின் இந்த பண ஒழிப்புக் காரணமாக டிசம்பர் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஆனால் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இன்னும் தீராததால் 'எஸ்3' வெளியீடு டிசம்பர் 23ம் தேதிக்கு தள்ளிப் போய் உள்ளது.

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது எஸ் 3.

English summary
Surya's S3 movie has been postponed to December 23 due to PM Modi's demonitisation effect.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil