»   »  41 கோடிகளுக்கு விலைபோனது சூர்யாவின் 'எஸ்3'

41 கோடிகளுக்கு விலைபோனது சூர்யாவின் 'எஸ்3'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் 'எஸ்3' படத்தின் தமிழக உரிமை 41 கோடிகளுக்கு விலை போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'24' படத்துக்குப் பின் சூர்யா தற்போது 'எஸ்3' படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்காவும், பத்திரிக்கையாளர் வேடத்தில் ஸ்ருதி ஹாசனும் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஹரி இயக்கி வருகிறார்.

S3 Tamil Nadu Rights Sold

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை 41 கோடிகள் வரை விலை போயிருப்பதாக கூறப்படுகிறது. 'சிங்கம்', 'சிங்கம்-2' படங்களின் வெற்றியால் உதயம் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இவ்வளவு தொகை கொடுத்து கைப்பற்றியிருக்கிறதாம்.

தீபாவளிக்கு கார்த்தியின் 'காஷ்மோரா' வெளியாவதால் டிசம்பர் அல்லது பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் அங்கும் இப்படம் 18 கோடிகளுக்கு விலை போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Surya's S3 Tamil Nadu Rights Sold Huge Amount.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil