»   »  தீபாவளி நாளில் சூர்யா - ஹரியின் 'எஸ் 3' டீசர்!

தீபாவளி நாளில் சூர்யா - ஹரியின் 'எஸ் 3' டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கம் 3 படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டன.

சூர்யாவுக்கு இந்தப் படம் ரொம்ப முக்கியம். அஞ்சான், மாசு அதிர்ச்சியிலிருந்து 24-ல் ஓரளவு மீண்டாலும், ஒரு அதிரடியான வெற்றியை சிங்கம் 3 தரும் என நம்புகிறார், எதிர்ப்பார்க்கிறார்.

S3 Teaser on Deepawali day

இந்தப் படத்தை சோலோவாக டிசம்பரில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இப்போது படத்தின் முதல் டீசரை கட் பண்ணும் வேலையில் படத்தின் எடிட்டர் பிஸியாகிவிட்டார்.

வரும் தீபாவளி தினத்தன்று சிங்கம் 3 -ன் முதல் டீசர் வெளியாகவிருக்கிறது. இதனை கிட்டத்தட்ட பட வெளியீட்டுக்கு இணையான முக்கியத்துவத்துடன் வெளியிடுகிறார் ஞானவேல்ராஜா.

சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன், சூரி, அனூப் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

English summary
Director Hari has completely wrapped up the talkie portions of Suriya's S3, and the first look teaser of the film will be unveiled for Deepavali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil