துப்பாக்கியுடன் மிரட்டும் சமுத்திரக்கனி… வெளியானது நான் கடவுள் இல்லை மோஷன் போஸ்டர் !
சென்னை : எஸ்.ஏ சந்திர சேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் நான் கடவுள் இல்லை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
க்ரைம், த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி,ரோகினி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, சிறுமி டயானா ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

புரட்சிகரமான கருத்து படங்கள்
நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் ஆகிய புரட்சிகரமான கருத்துகள் அடங்கிய படங்களை படங்களுக்கு பெயர் போனவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். 80களில் இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு என்று தனி மவுசு இருக்கும். அந்த திரைப்படங்கள் திரையரங்கில் பல நாட்கள் ஓடின.

நான் கடவுள் இல்லை
எஸ்.ஏ.சந்திரசேகரின் 71வது திரைப்படம் தான் இந்த நான் சிகப்பு மனிதன். அதேபோன்று புரட்சிகரமான கருத்துகளை கொண்ட ஒரு புதிய படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்துக்கு அவர், நான் கடவுள் இல்லை என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

சமுத்திரக்கனி சி.பி.சி.ஐடி அதிகாரியாக
இதில் சமுத்திரக்கனி சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக, வாகை சூடவா, மவுனகுரு ஆகிய படங்களில் நடித்த இனியா நடித்துள்ளார். இவர்களுடன் துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரியாக சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில், பருத்தி வீரன்புகழ் சரவணன் நடித்துள்ளார். ஓய்வுபெற்ற வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகரன், அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் ரோகிணி, நகைச்சுவை வேடத்தில் இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

மோஷன் போஸ்டர்
க்ரைம், த்ரில்லர் திரைப்படமான நான் கடவுள் இல்லை படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த மோஷன் போஸ்டரில் தெறிக்கும் கண்ணுடன் ஆக்ரோஷமாக கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மிரட்டி உள்ளார் சமுத்திரக்கனி. இப்படத்தின் இசை விரைவில் வெளியாக உள்ளது. சமுத்திரக்கனி சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் சிவப்பு மனிதன் திரைப்படத்தை 64 முறை பார்த்ததாக கூறி இருந்தார். எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க நீண்டநாள் ஆசைப்பட்டேன் அந்த ஆசை தற்போது நிறைவேறி உள்ளதாக கூறியிருந்தார்.
Recommended Video

ஏராளமான படங்களில்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி, எம்.ஜி.ஆர்மகன், ஆர்ஆர்ஆர், இந்தியன்2, அந்தகன், டான் போன்ற தமிழ் படங்களையும், 2 days என்ற மலையாளப்படம் ஒன்றையும், சர்காரு வாரி பட்டா மற்றும் பீம்லா நாயக் என்ற தெலுங்கு திரைப்படங்களையும் கையில் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











