»   »  இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள்!- போட்டுத் தாக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்

இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள்!- போட்டுத் தாக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் 'நையப்புடை'. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.

SA Chandrasekaran blasted young film makers

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

'நையப்புடை' படத்தின் அனுபவம் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்பேசும் போது, "எனக்கு உழைப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். நான் 5 ஆண்டுகள் காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டவன். படப்பிடிப்புக்கு மும்பை போகும் போது பைவ் ஸ்டார் ஓட்டலில் தங்கியிருப்பேன். ஸ்டார் ஓட்டலில் நாம் சமைக்க அனுமதி இல்லை. எனவே பாத் ரூமில் உள்ள ப்ளக் பாயிண்டில் குக்கரை வைத்து என் மனைவி சமைத்துக் கொடுப்பார். யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள்.

SA Chandrasekaran blasted young film makers

உண்மையாகக் காதலித்தால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். இப்போதெல்லாம் உண்மையாகக் காதலிப்பவர்கள் இருப்பதில்லை. மனைவியைப் போலவே நான் சினிமாவையும் நிஜமாகவே காதலிக்கிறேன். என்றும் காதலுக்கு தனி சக்தி உண்டு. காதலித்தால் ஒரு சக்தி வரும். அதனால்தான் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் படத்தில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வருகிறது.

எனக்கு உழைக்க மட்டுமே தெரியும். என் தயாரிப்பாளர்கள் சொல்வார்கள் 'மாடு மாதிரி உழைக்கிறானே' என்பார்கள். நான் பெரிய அறிவாளி இல்லை. எனக்கு 2 வரி கவிதை கூட எழுதத் தெரியாது. 4 வரி வசனம்கூட எழுதத் தெரியாது. இலக்கியம் படித்ததில்லை. இருந்தாலும் உழைப்பேன்.

இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள். கதையில்லாமல் படம் எடுக்கிறார்கள். அதுவும் ஓடுகிறது. எனக்கு 73 வயது ஆகிறது. இந்த இயக்குநருக்கு 19 வயதுதான் ஆகிறது. இந்தப் பையன் இயக்குநர் என்று படம் ஆரம்பித்ததும் 2 நாளில் ஓடிவிடலாம் என்று நினைத்தேன். இது சரிப்பட்டு வராது படத்தை நிறுத்தி விடலாம் என்றேன். தாணுதான் சமாதானப் படுத்தினார் 4 வதுநாள் எடிட் செய்து எடுத்ததைக் காட்டியதைப் பார்த்தவுடன்தான் நம்பிக்கை வந்தது. இன்றைய இளைஞர்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள். நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

பா.விஜய்யை என் இன்னொரு மகனாகவே பார்க்கிறேன். படத்தின் கதை எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தாலும், அவர் பெருந்தன்மையுடன் 'ஜெயிக்கிற படத்தில் நான் இருக்கிறேன் ' என்றார்.. இப்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷுடன் நடிக்கிறேன் தனுஷ் நடிப்பது தெரியாமல் நடிக்கிறார். அவரிடம் நிறைய கற்றுக்கொள்கிறேன்.இன்றைய இளைஞர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது,' என்றார்.

SA Chandrasekaran blasted young film makers

நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜீவன், தயாரிப்பாளர்கள் பி,டி .செல்வகுமார், காஸ்மோ சிவா ஆகியோரும் பேசினார்கள்.

English summary
Director turned actor SA Chandrasekaran says that the present day film makers taking movies without the knowledge of cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil