»   »  எஸ்ஏ சந்திரசேகரன் மீண்டும் நடித்து இயக்கும் புதிய படம்!

எஸ்ஏ சந்திரசேகரன் மீண்டும் நடித்து இயக்கும் புதிய படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆயிரம் சபதங்கள் எடுத்தாலும், சினிமாக்காரர்கள் வைராக்கியம் கொஞ்ச நாளைக்குத்தான். டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கியபோது, இதுதான் என் கடைசிப் படம் என்று கூறிய விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன், இப்போது மீண்டும் ஒரு படம் இயக்கும் முயற்சியில் உள்ளார்.

டூரிங் டாக்கீஸ் படத்தை, ஒரு படத்துக்குள் இரு வேறு கதைகள் என்ற கான்செப்டில் உருவாக்கினார் எஸ்ஏ சந்திரசேகரன்.

SA Chandrasekaran to direct again

அப்போது இனிமேல் படம் இயக்கமாட்டேன் இதுதான் கடைசிப்படம் என்று சொல்லியிருந்தார். படம் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றாலும், எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

அதனால்தான் மீண்டும் அவர் ஒருபடத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கிறாராம். அவருடன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

'நையப்புடை' என்பது அந்தப் படத்தின் தலைப்பு என்றும், கலைப்புலி தாணு அப்படத்தைத் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

English summary
Vijay's father SA Chandrasekaran is going to another movie after Touring Talkies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil