»   »  நையப்புடை.... ஹீரோ யார் தெரியுமா விஜய் ஃபேன்ஸ்?

நையப்புடை.... ஹீரோ யார் தெரியுமா விஜய் ஃபேன்ஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேப்டன் விஜயகாந்த், ரகுமான், இளைய தளபதி விஜய் ஆகிய ஸ்டார் ஹீரோக்களை அறிமுகம் செய்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஒரு படத்தில் முழு ஹீரோவாக அறிமுகமாகிறார்.

படத்துக்குப் பெயர் நையப்புடை. தயாரிப்பவர் கலைப்புலி எஸ் தாணு.

SA Chandrasekaran to play as hero in Nayyapudai

இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக கவிஞர் பா.விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், விஜி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகர் 70 வயது நிரம்பிய, அதே நேரத்தில் தவறுகளை கண்டு வெகுண்டெழும் கோபக்கார கிழவனாக அதிரடி கதாப்பாத்திரத்திலும், கவிஞர் பா.விஜய் வேகமான துடிப்புள்ள இளம் ரிப்போர்ட்டராகவும், நான் கடவுள் ராஜேந்திரன் நகைச்சுவை கலந்த வில்லனாகவும், எம்.எஸ்.பாஸ்கர் ஒரு கிரிமினலான போலீஸ் அதிகாரியாகவும், ஆரோகணம் விஜி புரட்சிகரமான ஏழைத் தாயாகவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் விஜய் விக்ரம் இயக்குகிறார். இவர் பூனா பிலிம் இன்ஸ்டியூட்டிலும், மும்பையிலும் இயக்குநர் பயிற்சி பெற்றவர். ஜீவன் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைக்கிறார்.

கலைபுலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் பிரமாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறாராம்.

இந்த படம் பற்றி தாணு அவர்கள் கூறுகையில், "ஒரு ஆக்ஷன் படத்தை வித்தியாசமாகவும் முழுக்க முழுக்க நகைசுச்வையாகவும் சொல்லப் போகும் படம் இது.

இயக்குநர்கள் பவித்ரன், ஷங்கர், ராஜேஷ், பொன்ராம் இவர்களை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பட்டறையில் இருந்து புறப்பட்டு வரும் அடுத்த இயக்குனர் விஜய் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் மகன் விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரையும் ஹீரோவாக வைத்து படமெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பெரிய நடிகராகவும் வலம் வருவார் என்பது நிச்சயம்," என்றார் தாணு.

எஸ் ஏ சந்திரசேகரன் ஏற்கெனவே பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் இயக்கி நடித்த படம் டூரிங் டாக்கீஸ். கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

English summary
Vijay's father SA Chandrasekaran is going to play as hero in a movie titled Nayyapudai produced by Kalaipuli S Thaanu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil