»   »  டிராஃபிக் ராமசாமியாக எஸ்ஏ சந்திரசேகரன்.. உடன் விஜய்யும் நடிப்பாரா?

டிராஃபிக் ராமசாமியாக எஸ்ஏ சந்திரசேகரன்.. உடன் விஜய்யும் நடிப்பாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்ஏ சந்திரசேகரன் அவர்கள் சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சனைகளை அலசிய முக்கியமான படங்களை இயக்கியவர். புரட்சி இயக்குநர் என்றே இவருக்கு பட்டப் பெயர் உண்டு.

இவர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ட்ராஃபிக் ராமசாமியாகவே நடிக்கிறார். அவரது உதவியாளர் விஜய் விக்ரம் படத்தை இயக்குகிறார்.

SA Chandrasekaran in Traffic Ramasamy Bio Pic

இதுகுறித்து எஸ்ஏசி நம்மிடம் கூறுகையில், "பொதுமக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளைத் தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. அப்படி தொடர்ந்த பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி தீர்ப்புகளையும் வாங்கி த்தந்தவர். இத்தீர்ப்புகளினால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளும், ரொளடிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் இவர் மீது கோபம் கொண்டு இவரை பல வகையில் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல முறை டிராஃபிக் ராமசாமியை கொல்ல முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. இருந்தும் தொடர்ந்து அவர் சமூகத்திற்காக இன்றும் போராடிக்கொண்டே தான் இருக்கிறார். அந்த போராட்ட குணம் என்னை கவர்ந்தது.

SA Chandrasekaran in Traffic Ramasamy Bio Pic

என் உதவி இயக்குநரும், பல குறும்படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே என்னை வைத்து பலரும் பாராட்டிய நகைச்சுவையான மார்க் என்ற குறும்படத்தை இயக்கியவர்.

இந்தப் படம் குறிப்பிட்டத்தக்க அரசியல் படமாக அமையும்," என்றார்.

படம் குறித்து இயக்குநர் விஜய் விக்ரம் கூறுகையில், "இப்படம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதால் பல திருப்புமுனை சம்பவங்களும், திருப்பங்களும் எதார்த்தமாவே அமைந்துள்ளன. இந்த படம் திரைக்கு வரும்போது சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி," என்றார்.

இந்தப் படத்தில் விஜய் ஏதாவது ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இப்படத்தை கிரீன் சிக்னல் பட நிறுவனம் தயாரிக்கிறது.

English summary
SA Chandrasekaran, the versatile filmmaker-actor will be playing the lead role in the biopic of ‘Traffic Ramasamy’, the man who has been raising his voice and standing for justice against several odd and social evils in from his age of 10.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil