»   »  தனுஷின் அப்பாவாக மாறிய எஸ்.ஏ.சந்திரசேகர்

தனுஷின் அப்பாவாக மாறிய எஸ்.ஏ.சந்திரசேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் தனுஷின் அப்பாவாக, இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து துரை.செந்தில்குமாரின் புதிய படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார்.

SA Chandrasekhar Plays Dhanush Father

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்குகிறது. நவம்பர் , டிசம்பர் என 2 மாதங்களிலேயே படப்பிடிப்பை முடிக்க தனுஷ் திட்டமிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷின் அப்பாவாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் அப்பாவாக நடிக்கக் கேட்டபோது எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் என்று கூறுகின்றனர்.

தனுஷின் நடிப்பில் உருவான தங்கமகன் திரைப்படம் டிசம்பர் மாதம் 18ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

English summary
Durai Senthilkumar's Untitled Project Vijay's father, SA Chandrasekhar who has been signed on to play Dhanush's Father.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil