For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நக்கலடித்தவர்கள் முகத்தில் கரி பூசிய அஸ்லாம் - ஜி டிவி சரிகமப சீசன் 2 டைட்டில் வென்று அசத்தல்

  |
  தளபதி படத்துக்கு பாட ஆசை | SINGER ASLAM | ZEE TAMIL|SA RE GA MA PA WINNER|V-CONNECT |FILMIBEAT TAMIL

  சென்னை: ஜி டிவியில் சரிகமப சீசன் 2 நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அஸ்லாம் கடவுளுக்கும் தனக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாய் இருந்த தனது பெற்றோர்களுக்கும் நடுவர் குழுவுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். இதுவரையிலும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லையே என்று அனைவரும் கேலி செய்த போதிலும், தன்னம்பிக்கையோடு போராடி வெற்றிபெற்றுள்ளதாக அஸ்லாம் குறிப்பிட்டு பேசினார்.

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 06.30 மணி முதல் மாலை 08.00 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு நிகழ்ச்சி.

  SA Re Ga Ma Pa Seniors Season 2 Title winner Aslam

  2019ஆம் ஆண்டிற்கான சரிகமப சீனியர்ஸ் (சீசன் 2) நிகழ்ச்சி ஜீ தமிழில் கடந்த மே 18ஆத் தேதி முதல் முதல் ஒளிபரப்பாகிறது. 24 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டமான இறுதிப் போட்டி அக்டோபர் 19ஆம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

  பாடகி சுஜாதா மோகன், பின்னணி பாடகர் சீனிவாஸ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இந்த பிரமாண்டமான இறுதிப் போட்டியின் முக்கிய நடுவர்களாக இருந்தனர்.

  சிறந்த நடுவர் குழுவும் இறுதிப் போட்டியில், வெற்றியாளரை தீர்மானிப்பதில் பங்கு கொண்டனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் நடிகை-பாடகி ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

  Exclusive இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... பிரமாண்ட மேடையை அலங்கரிக்கும் யுவன் சங்கர் ராஜா!

  வாரம் தோறும் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவர் அர்ச்சனா. இவரின் நகைச்சுவையும், நக்கலும் நையாண்டியும் அந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் குதூகலமாகவும் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி மூலம் அர்ச்சனா மிகவும் பிரபலமானார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த கிராண்ட் ஃபைனலை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்கினார் தீபக்.

  ஐஸ்வர்யா, லட்சுமி, சுகன்யா, கார்த்திக் மற்றும் அஸ்லம் ஆகிய 5 இறுதிப் போட்டியாளர்களுக்கு 2 தனித்தனி சுற்றுகளில் பாடும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஐந்துபோட்டியாளர்களும் மிக சிறப்பாக தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தங்களது பாடும் திறமையை மக்கள் முன்பு நேரடியாக வெளிப்படுத்தினர்.

  இறுதியாக, வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த நடுவர் மன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் மற்றும் பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த இசை நிகழ்ச்சியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

  அஸ்லாம் சரிகமப சீனியர்ஸ் (சீசன் 2) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தினை சுகன்யா மற்றும் கார்த்திக் இருவரும் பகிர்ந்துகொண்டனர். இரண்டாம் பரிசிற்கான 8 லட்ச ரூபாயை தலா 4 லட்சமாக இருவரும் பங்கிட்டுக்கொண்டனர். மூன்றாவது இடத்தை பிடித்த ஐஸ்வர்யாவிற்கு ரூபாய் 2 லட்சமும், நான்காவது இடத்தை பிடித்த லட்சுமிக்கு ரூபாய் 1 லட்சமும் வழங்கப்பட்டது.

  மேலும், இந்த சீனின் பொழுதுபோக்காளராக இருந்த இரு போட்டியாளர்கள் அசாமி பெண் கிருஷாங்கி மற்றும் சரவெடி சரண் ஆகியோருக்கு சிறப்பு ரொக்க பரிசாக ரூ. 1 லட்சம் (இருவரும் பகிர்ந்து கொண்டனர்) வழங்கப்பட்டது.

  டைட்டில் வின்னர் அஸ்லாம் தனது வெற்றி குறித்து பேசுகையில், அவர் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றாலும் ஒரு போட்டியில் கூட ஜெயிக்க வில்லை என்று பலர் அவரை கேலி செய்த போதிலும், மிகுந்த தன்னம்பிக்கையோடு போராடிய அவருக்கு இந்த வெற்றி மிகவும் ஆனந்தத்தை அளித்துள்ளது. அவரது பிரார்த்தனைகள் நிறைவேறியதை நினைத்து மனம் குளிர்ந்தார். கடவுளுக்கும் தனக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாய் இருந்த தனது பெற்றோர்களுக்கும் நடுவர் குழுவுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

  ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்த போதும், அதை பற்றி சிறுதும் பொருட்படுத்தாமல், தனது கடுமையான உழைப்பாலும் தனது தாயின் அரவணைப்பிலும், சக போட்டியாளர்களுடன் சமமாக போட்டியிட்டு இரண்டாம் இடத்தை தட்டி சென்ற கார்த்திக்கின் தாய் தன மகனுக்கு ஆதரவு அளித்து அவனின் தன்னம்பிக்கைக்கு மகுடம் சூட்டிய அனைத்து ஆதரவாளர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்தார்.

  மேலும் இரண்டாம் பரிசை வென்ற சுகன்யா கூறுகையில், தனது பெற்றோர் முன்னிலையில் இந்த பரிசினை பெற்றதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறார். முதலாவது ரன்னர் அப் ஆக வென்றதில் மிக்க மகிழ்ச்சி என்றார். இந்த நிகழ்ச்சி இசையின் அம்சங்களில் மட்டுமல்லாமல், ஒரு சிறந்த நபராகவும் அவரை நிறைய வடிவமைத்துள்ளது என்றும் கூறினார் சுகன்யா. மேலும் பல உணர்ச்சிகரமான தருணங்கள் விருதுகள் வழங்கல் நிகழ்ச்சியின் போது நிகழ்ந்தது.

  இது போன்ற இசை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளின் மூலம் பல திறமையானவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். இன்றைய தலைமுறையினருக்கு ஒரு நல்ல அடித்தளமாக இது போன்ற நிகழ்ச்சிகள் இருக்கின்றன. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் போட்டி போட்டு கொண்டு சிறப்பாக பாடுவது பார்வையாளர்களை மெய்சிலிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியினை பார்க்கும் மற்றவர்களுக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கின்றன. இன்றைய சமூகம் பல வகைகளும் முன்னேறி வருகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்றாகும்.

  Read more about: zee tv aslam
  English summary
  Aslam, who won the Sarigama Season 2 show on G TV, thanked God and his parents and the arbitration team for all their support.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X