»   »  சாஹோ படத்தில் நடிக்க பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சாஹோ படத்தில் நடிக்க பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாஹோ படத்தில் நடிக்க பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூருக்கு பேசப்பட்டுள்ள சம்பள விபரம் தெரிய வந்துள்ளது.

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. ரூ. 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் மெகா படம். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

அம்மாடி

அம்மாடி

சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்வதற்குள் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் கண்ணை கட்டிவிட்டதாம். அந்த அளவுக்கு சம்பள விஷயத்தில் அடம்பிடித்திருக்கிறார் ஷ்ரத்தா.

ரூ. 12 கோடி

ரூ. 12 கோடி

ரூ. 12 கோடி கொடுத்தால் மட்டுமே சாஹோ படத்தில் நடிப்பேன் என்று அடம் பிடித்திருக்கிறார் ஷ்ரத்தா. வாரக் கணக்கில் அவருடன் பேரம் பேசி ஒரு வழியாக ரூ. 9 கோடி சம்பளத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி, பாகுபலி 2 மெகா ஹிட் படங்களை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க பிரபாஸுக்கு ரூ. 30 கோடி சம்பளமாம்.

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட் பக்கம் படத்தை போனி செய்ய வசதியாகத் தான் ஷ்ரத்தா கபூரை ஹீரோயினாக்கியுள்ளார்கள். ஆனால் பிரபாஸ் ரசிகர்களுக்கோ அனுஷ்கா நடிக்காததில் வருத்தமாக உள்ளதாம்.

ரிலீஸ்

ரிலீஸ்

சாஹோ படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் வித்தியாசமான பிரபாஸை பார்க்கலாம் என்று இயக்குனர் சுஜீத் தெரிவித்துள்ளார்.

English summary
Finally Shraddha Kapoor is finalised for Prabhas starrer Saaho. Prabhas is being paid Rs. 30 crores while Shraddha is getting Rs. 9 crores.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil