»   »  மருத்துவ அறிவியல் த்ரில்லர் சாய்ந்தாடு... ட்ரைலர் வெளியானது!

மருத்துவ அறிவியல் த்ரில்லர் சாய்ந்தாடு... ட்ரைலர் வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கசாலி இயக்கியுள்ள மருத்துவ அறிவியல் த்ரில்லர் படம் சாய்ந்தாடு.

ஒரு டாக்டர் ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடிக்கிறார். அந்த முக்கியமான மருந்தை ஆராய்ச்சி செய்ய 'கிளினிக்கல் டிரையல்' என்ற மருத்துவ ஆராய்ச்சிக்காக 25 வயதுக்குட்பட்ட வாலிபர்களைக் கடத்தி மருந்தைச் செலுத்தி ஆராய்கிறார். 'ஓ' நெகட்டிவ், 'பி' நெகட்டிவ் மற்றும் 'ஏபி' நெகட்டிவ் ரத்த குரூப் உள்ள வாலிபர்கள் மருந்தினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு முகம், உடலெல்லாம் கொப்புளம் வந்து வீங்கி செத்துப் போகிறார்கள். 'ஏ' நெகட்டிவ் பிளட் குரூப் உலகத்தில் மிக அரிதான ரத்த வகை. அது படத்தின் கதாநாயகனுக்கு இருக்கிறது.

டாக்டர் 'ஏ' நெகட்டிவ் குரூப் உள்ள வாலிபனைத் தேடிக்கொண்டிருக்கும்போது ஒரு தற்செயலான பிரச்சனையில் ஹீரோ அடிபட்டு, அந்த ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிறான். டாக்டரும் அவனுக்கு அந்த புதிய மருந்தைச் செலுத்துகிறார்.

அவன், மருந்தின் விளைவாக பலசாலியாகிறான். சாதாரணமானவனாக இருந்தவன் பலசாலியாகி நிறைய விசயங்களைச் செய்கிறான். பின்பு, அவனுக்கும் மருந்தின் பக்க விளைவு காரணமாக முகம், உடலெல்லாம் கொப்புளம் வருகிறது. ஒரு கட்டத்தில் சீரியசாகி கோமா நிலைக்குச் செல்கிறான்.

இறுதியில், டாக்டர் என்ன ஆனார், ஹீரோ என்ன ஆனான், டாக்டரைப் பழி வாங்கினானா? என்பதுதான் படத்தின் முடிவு. மருத்துவ ஆராய்ச்சி, அந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்பவைதான் கதையின் மையக் கரு.

கிட்டத்தட்ட ஐ படத்தின் கதை மாதிரி தெரிந்தாலும், அந்தப் படம் வெளியாகும் முன்பே எடுத்து முடிக்கப்பட்டுவிட்ட படம் இந்த சாய்ந்தாடு. இப்போதுதான் வெளியாகிறது.

புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். படம் விரைவில் வெளி வரவிருக்கிறது.

English summary
Gassali directed Saainthadu movie teaser has been launched today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil