»   »  சாமி 2... பெருமாள் பிச்சையை விட பத்துமடங்கு பலசாலி வில்லனாம் இவரு!

சாமி 2... பெருமாள் பிச்சையை விட பத்துமடங்கு பலசாலி வில்லனாம் இவரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோவாக பெரிய ரவுண்ட் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட பாபி சிம்ஹா, மீண்டும் வில்லன் வேடங்களுக்கே திரும்பிவிட்டார்.

அவர் வில்லனாக களமிறங்கும் புதிய படம் விக்ரமின் சாமி 2. இத்தனை நாட்கள் அரசல் புரசலாக பேசப்பட்ட இந்த விஷயம் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Saami 2 Villain

பாபி சிம்ஹா தேர்வு குறித்து இயக்குநர் ஹரி கூறுகையில், "விக்ரம் சார், ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல பர்ஃபாமராகவும் இருப்பது அவரின் தனி அடையாளம்.

அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல பர்ஃபாமராக இருக்கவேண்டும். அதனால்தான் பாபி சிம்ஹாவை வில்லனாக நடிக்க தேர்வு செய்து உள்ளோம்.

சாமி படத்தின் முதல் பாகத்தில் 'பெருமாள் பிச்சை 'என்ற வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும். தற்போது தயாராகவிருக்கும் சாமி 2வில் பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் வில்லன் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கேரக்டரில் பாபி சிம்ஹா புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்," என்றார்.

சீயான் விக்ரமும், பாபி சிம்ஹாவும் தேசிய விருதுபெற்ற நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Bobby Simha has signed as the villain for Vikram in Saamy 2

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil