»   »  'சாமி -2' படத்தின் டைட்டில் மாறுகிறதா?

'சாமி -2' படத்தின் டைட்டில் மாறுகிறதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த 'சாமி' படம் 2003-ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த சமயத்தில் அடுத்தபடியாக ரஜினி படத்தை ஹரி இயக்குவார் என்றெல்லாம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாமி படத்தைத் தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படங்களாக இயக்கி வந்த ஹரி, தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு 'சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்தப் படத்திலும் விக்ரம் ஆறுச்சாமி கேரக்டரிலேயே நடிக்கிறார்.

saamy 2 title change

முந்தைய கதையின் தொடர்ச்சியாகவே 'சாமி 2' கதையும் அமைந்திருப்பதாகப் கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த த்ரிஷாவுடன் இணைந்து மற்றொரு நாயகியாக இப்போது கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.

வில்லன் வேடத்தில் நடித்த கோட்டா சீனிவாசராவ் மகனாக பாபி சிம்ஹா வில்லன் வேடத்தில் நடிக்கிறாராம். இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், 'சாமி 2' என்ற தலைப்பை சாமி ஸ்கொயர் என்று மாற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

English summary
The second of the movie 'Saamy' is being directed by hari. The story of 'Saamy 2' is said to have been a continuation of the previous story. It is reported that the 'Saamy 2' title has been changed to Saamy Square.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil