»   »  மிருகம் படத்தையே பார்க்க முடியலை..இதுல பார்ட் 2 வேறயா?

மிருகம் படத்தையே பார்க்க முடியலை..இதுல பார்ட் 2 வேறயா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2007 ல் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்ற மிருகம் படத்தின், 2 வது பாகத்தை எடுக்க அப்படத்தின் இயக்குநர் சாமி தற்போது ஆர்வம் காட்டி வருகிறாராம்.

தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய இயக்குநர்களில் முதன்மையானவர் சாமி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அவ்வப்போது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம்.

கொஞ்ச காலம் அமைதியாக இருந்த சாமி தற்போது அடுத்த சர்ச்சையையைக் கையில் எடுத்திருக்கிறார்.

சாமி

சாமி

2006 ம் ஆண்டு வெளியான 'உயிர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சாமி. சங்கீதா, ஸ்ரீகாந்த் நடித்திருந்த இப்படத்தில் கொழுந்தன் மேல் ஆசைப்படும் அண்ணியாக சங்கீதா நடித்திருந்தார். வெளியான புதிதில் இப்படம் கடுமையான விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளுக்கு உள்ளானது.

மிருகம்

மிருகம்

அழகான ஆதியை மோசமான பெண் பித்தனாக சித்தரித்து தனது அடுத்தப் படமான 'மிருகம்' திரைப்படத்தை உருவாக்கியிருந்தார் சாமி. அழகான பத்மப்பிரியாவை அடித்தது, அவரின் நடிப்பை வீணடித்தது என்று 'உயிர்' படத்திற்கு சற்றும் குறைவில்லாமல் சர்ச்சைகளில் சிக்கியது 'மிருகம்'.

சிந்து சமவெளி

சிந்து சமவெளி

சாமியின் படங்களில் சர்ச்சைகளில் அதிகம் சிக்கிய படம் என்ற பட்டத்தை சற்றும் யோசிக்காமல் 'சிந்து சமவெளி'க்கு கொடுக்கலாம். இயக்குநர் சாமி வழக்கம் போல இந்தப் படத்தில் மருமகள் மேல் ஆசைப்படும் மாமனார் செய்யும் செயல்களை படமாக்கி தமிழ் ரசிகர்களின் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார். இயக்குநர் விஜய்யின் மனைவி அமலாபாலை நாயகியாக அறிமுகம் செய்ததைத் தவிர இந்தப் படத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேறு எதையும் சாமி செய்யவில்லை.

கங்காரு

கங்காரு

சர்ச்சையில்லாமல் சாமி எடுத்த ஒரே படம் கங்காரூ மட்டும் தான். அர்ஜுனா, ஸ்ரீ பிரியங்கா, தம்பி ராமையா நடிப்பில் அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதும் எடுபடவில்லை.

மிருகம் 2

மிருகம் 2

இந்நிலையில் ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் சாமி தனது முதல் பட ஹீரோ ஆதியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர். இந்தப் படமும் மிருகம் பாணியிலேயே எடுக்க சாமி முடிவு செய்திருக்கிறாராம். மிருகம் படத்தில் நடித்த பத்மப்ரியாவைத் தவிர மற்ற அனைவரும் இந்தப் படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

சாமி, ஆதி இரண்டு பேரின் படங்களும் தொடர்ந்து தோல்வியையே சுவைத்து வருவதால் ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த முறை களத்தில் இறங்குகின்றனர். இதனால் சாமியின் முந்தைய படங்களைப் போல இதிலும் சர்ச்சைகளை எதிர்பார்க்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

English summary
Sources said Controversy 'Fame' Director Samy and actor Aadhi Join hands once again for Mirugam Sequel.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil