»   »  அப்போ சபாஷ் நாயுடு கதி?

அப்போ சபாஷ் நாயுடு கதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரொம்ப நாட்களாக எனக்கு அரசியல் தெரியாது.. வராது... ஓட்டுப் போடுவதோடு என் வேலை முடிந்துவிட்டது என்று சொல்லிக் கொண்டிருந்த கமல் ஹாஸன்தான் இன்று அரசியல் களத்தில் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

தனிக் கட்சி தொடங்கப் போகிறாரா? அல்லது வேறு கட்சியில் இணைந்து அரசியல் பணி செய்யப் போகிறாரா? இது அரசியல் பார்வையாளர்கள் ஆவலுடன் கேட்கும் கேள்வி.

Sabash Nayudu becomes a big question

கமல் ஹாஸன் இயல்பு புரிந்தவர்களுக்கு, அவர் தனிக்கட்சி தொடங்கமாட்டார் என்பது நன்கு தெரியும். ஆக அவர் இருக்கிற கட்சிகளில் ஏதோ ஒன்றில் இணையப் போகிறார்... அல்லது ட்விட்டர் அரசியலைத் தொடரக் கூடும்.

எப்படிப் பார்த்தாலும் வரும் நவம்பர் மாதம் கமல் ஹாஸன் நேரடி அரசியல் களத்தில் இறங்குவார் என்று தகவல் கிடைத்துள்ளது.

அப்படி ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்துவிட்டால், அவரை நம்பி பெரும் செலவு செய்து எடுக்கப்பட்டு வரும் சபாஷ் நாயுடு படத்தின் கதி? பாதிப் படம் முடிந்த நிலையில் கமல் கால் முறிந்ததால் படப்பிடிப்பு அப்படியே நிற்கிறது. படத்தின் நாயகியான ஸ்ருதிஹாஸனாலேயே இப்போது கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை.

கமலும் பிக் பாஸ், ட்விட்டர் என வேறு வழிகளில் பிஸியாகிவிட்டார். சபாஷ் நாயுடு படத் தயாரிப்பாளரான லைகா பெரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Since Kamal Hassan is busy in Big Boss and Twitter politics, his next project Sabash Nayudu becomes a big question mark.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil