»   »  'டிஆர்பி'க்காக கவண் பட பாணியில் தில்லாலங்கடி வேலை பார்த்த டிவி: திட்டும் நெட்டிசன்கள்

'டிஆர்பி'க்காக கவண் பட பாணியில் தில்லாலங்கடி வேலை பார்த்த டிவி: திட்டும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு தனியார் தொலைக்காட்சியின் டிஆர்பியை ஏற்ற என் வாழ்க்கையை பயன்படுத்திவிட்டார்கள் என சபீதா ராய் புலம்பியுள்ளார். கவண் படத்தை போன்றே நடக்கிறதே என்கிறார்கள் நெட்டிசன்கள்.

வாணி ராணி தொடரில் ஒரு குடும்பத்தை பிரித்தவராக நடித்த சபீதா ராய் தான் இன்றைய ஹாட் டாபிக். அதாவது ராடான் மீடியா நிறுவன மேலாளர் சுகுமாறனுக்கும், சபீதாவுக்கும் நள்ளிரவில் நடுத்தெருவில் நடந்த சண்டை பற்றி தான் பலரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியலை போன்றே நிஜத்திலும் ஒரு குடும்பத்தை நாசமாக்கிவிட்டாரே என்று சபீதாவை ஆளாளுக்கு வசை பாடுகிறார்கள்.

சண்டை

சண்டை

அப்பா வயது சுகுமாறனிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க அதை அவர் கொடுக்காமல் இழுத்தடித்தார். தனது வீட்டிற்கு வந்து பணத்தை வாங்குமாறு அவர் கூறியதால் தான் சென்றேன் என்கிறார் சபீதா.

முன்விரோதம்

முன்விரோதம்

சுகுமாறன் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி நபருக்கும், அவருக்கும் ஆகாது. நாங்கள் தெருவில் போட்ட சண்டையை அவர் வீடியோ எடுத்து சுகுமாறனை பழிவாங்க டிவியில் போட்டுவிட்டார் என்று குமுறியுள்ளார் சபீதா.

எடிட்டிங்

எடிட்டிங்

டிஆர்பிக்காக சண்டை வீடியோவை முழுதாக போடாமல் எடிட் செய்து போட்டு தனக்கும், சுகுமாறனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது போன்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்திவிட்டது அந்த டிவி என சபீதா தெரிவித்துள்ளார்.

கவண்

கவண்

கவண் படத்தில் வருவதை போன்றே டிஆர்பியை ஏற்ற சபீதா ராயின் வீடியோவை எடிட் செய்துள்ளார்கள் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அடப்பாவிகளா டிஆர்பிக்காக இப்படி எல்லாம் செய்வீர்களா என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
A private television channel has reportedly edited the fight between actress Sabitha Rai and Sukumaran for the sake of TRP.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil