twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநாடு வெற்றிவிழா...ஹீரோவே வரலைன்னா எப்படி?...சிம்பு குறித்து எஸ்ஏசி ஆதங்கம்

    |

    சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகி 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிவரும் படம் மாநாடு.

    இந்தப் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

    இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவரா? கணிக்க தொடங்கிய நெட்டிசன்ஸ்!இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவரா? கணிக்க தொடங்கிய நெட்டிசன்ஸ்!

    இந்நிலையில் இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளாதது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    மாநாடு படம்

    மாநாடு படம்

    நடிகர்கள் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ள படம் மாநாடு. இந்தப் படம் தீபாவளி பந்தயத்தில் இருந்து பின்வாங்கினாலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

    டைம் லூப் படம்

    டைம் லூப் படம்

    டைம் லூப் பாணியில் உருவாக்கப்ப்டடுள்ள இந்தப் படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் சிறப்பான திரைக்கதையால் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. பட்த்தை தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

    ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த மாநாடு

    ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த மாநாடு

    படம் வெளியாகி 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. மேலும் 100 கோடி ரூபாய் க்ளப்பிலும் சேர்ந்துள்ளது. இத்தகைய வசூல் சாதனையை புரிந்துள்ள சிம்புவின் முதல் படம் என்ற பெருமையையும் தற்போது இந்தப் படம் பெற்றுள்ளது.

    ரூ.100 கோடி க்ளப் ஹீரோ

    ரூ.100 கோடி க்ளப் ஹீரோ

    முன்னதாக சிம்புவின் மன்மதன் படம் மட்டுமே நல்ல வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு இந்தப் படத்தின்மூலம் 100 கோடியை ஈட்டிய படத்தின் ஹீரோ என்ற பெருமையை அடைந்துள்ளார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.

    மாநாடு சக்சஸ் மீட்

    மாநாடு சக்சஸ் மீட்

    இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்ஜே சூர்யா, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது. இசையமைப்பாளர் யுவனின் 25 ஆண்டு இசைப்பயணத்திற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    Recommended Video

    Vijay-SAC அரசியல் இது தான்..புட்டு புட்டு வைத்த Pandey | Tamil Filmibeat
    சிம்பு பங்கேற்கவில்லை

    சிம்பு பங்கேற்கவில்லை

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு பங்கேற்கவில்லை. தனது அடுத்த படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க வேண்டியுள்ளதால் அவர் சக்சஸ் மீட்டில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் இதுகுறித்து தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
    ஹீரோவை உயரத்தில் வைத்துள்ள படம் மாநாடு

    ஹீரோவை உயரத்தில் வைத்துள்ள படம் மாநாடு

    விழாவில் பேசிய எஸ்ஏசி "இந்தப் படம் குறித்து நான் நிறைய பேட்டிகள் கொடுத்துவிட்டேன். ஒரு படத்தின் வெற்றி கடைசியில் அந்தப் படத்தின் ஹீரோவுக்குத்தான் போய்ச் சேரும். எனினும் அந்த வெற்றிக்குக் காரணம் இயக்குநரும், கதையும்தான் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு நல்ல கதை, நல்ல திரைக்கதை யாரையும் உச்சத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும். இந்தப் படம் இதன் ஹீரோவை ரொம்ப நாட்களுக்குப் பிறகு உயரத்தில் கொண்டுபோய் அமர வைத்திருக்கிறது.

    சிம்பு மீது வருத்தப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்

    சிம்பு மீது வருத்தப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்

    எனக்குப் புரியவில்லை. இது ஒரு உண்மையான வெற்றி. ஆனால், இப்படத்தின் வெற்றி நாயகன் இந்த இடத்தில் இல்லாதது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னதான் ஷூட்டிங் இருந்தாலும் இங்கே வந்திருக்க வேண்டும். என்னமோ தெரியவில்லை. இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பம். இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் இங்கு வந்து கொண்டாடியிருக்க வேண்டும். கஷ்டமாக இருக்கிறது. அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்? அப்படிப்பட்ட ஒரு வெற்றியைக் கொண்டாட அந்த கதாநாயகன் இங்கே இருக்கவேண்டும். படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ வெற்றிக்குப் பின்பும் அப்படியே இருக்கவேண்டும். அப்போதுதான் இன்னொரு வெற்றி கிடைக்கும்''. இவ்வாறு அவர் பேசினார்

    வெற்றிக்கு பிறகு தலைகனம் கூடாது

    வெற்றிக்கு பிறகு தலைகனம் கூடாது

    சக்சஸ் மீட்டிற்கு கதாநாயகன் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும் என்றும் வெற்றி வந்தபிறகு தலைகணம் இருக்ககூடாது என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வளவு பணம் செலவு செய்து அவரை நம்பி தயாரிப்பாளர் படத்தை எடுத்திருக்கிறார் என்றும் அது என்ன சூட்டிங் எக்ஸ்க்யூஸ் என்றும் அவர் தனது கோபத்தை மேடையில் வெளிப்படுத்தினார்.

    முன்னணி இயக்குநர்களின் மகன்கள்

    முன்னணி இயக்குநர்களின் மகன்கள்

    சிம்பு மற்றும் எஸ்ஏசியின் மகனும் முன்னணி நடிகருமான விஜய் இருவரும் கோலிவுட்டில் முக்கிய நடிகர்களாக உள்ளனர். இருவருமே பிரபல இயக்குநர்களின் மகன்களாகவும் உள்ளனர். இந்நிலையில் சிம்புவை கார்னர் செய்யும் விதமாக எஸ்ஏசி பிரபல படத்தின் சக்சஸ் மீட் மேடையில் பேசியுள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

    கண்கலங்கிய சிம்பு

    கண்கலங்கிய சிம்பு

    பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் தான் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாக படத்தின் ரிலீசுக்கு முன்னதான பத்திரிகையாளர் சந்திப்பில் சிம்பு தெரிவித்திருந்தார். இந்த பிரச்சினைகளால் தான் அலைகழிக்கப்படுவதாகவும் கண்கலங்கினார்.

    மாறியுள்ள சிம்பு

    மாறியுள்ள சிம்பு

    இந்நிலையில் சிம்புவை கார்னர் செய்யும்வகையில் எஸ்ஏசி இந்த விமர்சனத்தை செய்துள்ளாரா என்ற சந்தேகம் சிம்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் சிம்பு இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது தயாரிப்பாளர், இயக்குநர்களின் தேவையை அறிந்து செயல்படுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director SAC criticised Simbu on Maanadu success meet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X