»   »  சச்சின்... திரையில் சாதித்தாரா, சறுக்கினாரா?

சச்சின்... திரையில் சாதித்தாரா, சறுக்கினாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான சச்சின் - ஓ பில்லியன் ட்ரீம்ஸ் படம் வெளியான முதல் நாளில் ரூ 9 கோடியை வசூலாகக் குவித்துள்ளது.

இந்தியக் கிரிக்கெட்டின் தன்னிகரற்ற வீரரான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி டாகுமெண்டரி பாணியில் உருவாக்கப்பட்ட சச்சின் - எ பில்லியன் ட்ரீம் நேற்று உலகெங்கும் வெளியானது.

Sachin Box Office

இந்தப் படத்தில் சச்சின், வீரேந்திர சேவாக், கங்குலி உள்ளிட்டோர் அவர்களின் நிஜ பாத்திரங்களாகவே தோன்றினர். சிறுவயது சச்சினாக, சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் நடித்தார்.

இந்தப் படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 2800 அரங்குகளில் வெளியானது.

முதல் நாள் மட்டும் ரூ 9 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளது. சச்சின் பற்றி மக்களுக்கு எல்லாமே தெரியும் என்பதால் இந்தப் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. இன்றும் நாளையும் என்ன வசூல் என்பதைப் பொறுத்தே இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி முடிவாகும்.

English summary
Sachin - A Billion Dream, a docudrama on Sachin Tendulkar has collected Rs 9 cr on its first day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil