»   »  வைரலாக்க வேண்டியது ப்ரியா வாரியரை அல்ல இந்த 'ராசாத்தி'யை தான்

வைரலாக்க வேண்டியது ப்ரியா வாரியரை அல்ல இந்த 'ராசாத்தி'யை தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அவனி சதுர்வேதி புது சாதனை- வீடியோ

சென்னை: வீரமங்கை அவனி சதுர்வேதியின் சாதனையை பார்த்து தனுஷ், சச்சின் டெண்டுல்கர் பெருமைப்பட்டுள்ளனர்.

ப்ரியா வாரியர் கண்ணடித்ததை பற்றியே பலரும் பேசிக் கொண்டிருக்கும்போது இந்திய விமானப்படையை சேர்ந்த அவனி சதுர்வேதி சத்தமில்லாமல் வரலாறு படைத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அவனி மிக்-21 போர் விமானத்தை தனி ஆளாக இயக்கியுள்ளார்.

வரலாறு

வரலாறு

மிக்-21(MIG-21) போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் இந்திய பெண் விமானி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் அவனி சதுர்வேதி. திங்கட்கிழமை மதியம் அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

பெண்கள்

பெண்கள்

இந்திய விமானப்படை பள்ளியில் அவனி உள்பட 3 பெண்கள் போர் விமானங்களை இயக்க பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் அவனிக்கு தான் போர் விமானத்தை முதலில் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீர மங்கை அவனிக்கு வாழத்துக்கள் வந்து குவிந்துள்ளது.

பெருமை

அவனி சதுர்வேதியின் சாதனையை பார்த்த நடிகர் தனுஷ் பெருமைப்படுவதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி

அவனியின் சாதனையை பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. நீங்கள் மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என்று அவனியை வாழ்த்தியுள்ளார்.

English summary
Dhanush, former cricketer Sachin Tendulkar are feeling so proud of Avani Chaturvedi who created history by flying solo in MiG-21. Sachin wishes her to achieve more.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil