»   »  நன்றி தலைவா... ரஜினி வாழ்த்துக்கு சச்சின் உற்சாக 'நன்றி'

நன்றி தலைவா... ரஜினி வாழ்த்துக்கு சச்சின் உற்சாக 'நன்றி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் 'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என்று ரஜினிகாந்திற்கு சச்சின் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் சச்சினுக்கு வாழ்த்து கூறியிருந்தார். ரஜினியின் வாழ்த்தால் உற்சாகமடைந்து பதில் டுவீட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் 'நன்றி தலைவா' என்று குறிப்பிட்டுள்ளார்.

Sachin thanked rajini for his wishes

மேலும் தமிழில் சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தை பார்த்து ரசிப்பீர்கள் என நம்புவதாக மகிழ்ச்சியோடு கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தும் சச்சின் என பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படத்தை அவரின் நண்பர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லரை இரண்டரை கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த படத்திற்கான புரமோஷன் வேலையில் சச்சின் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

English summary
Sachin retwitted thanks to superstar rajinikanth
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil