»   »  சோனம் கபூரை மாற்றி, மாற்றிப் புகழ்ந்த சச்சின், யுவராஜ்...!

சோனம் கபூரை மாற்றி, மாற்றிப் புகழ்ந்த சச்சின், யுவராஜ்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை சோனம் கபூரின் நீரஜா படத்தைப் பார்த்த சச்சின் தெண்டுல்கர், யுவராஜ் சிங் இருவரும் அவரை மாற்றி மாற்றி புகழந்து தள்ளியிருக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சோனம் கபூர், ஷபானா ஆஸ்மி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் நீரஜா. கடத்தப்பட்ட விமானத்தை அதே விமானத்தில் பணி புரியும் பணிப்பெண் மீட்பது தான் இப்படத்தின் கதை.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தில் விமானப் பணிப்பெண்ணாக அணில் கபூரின் மகள் சோனம் கபூர் நடித்திருந்தார்.

Sachin and Yuvarj Praises Sonam Kapoor

ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக்கொண்டு உருவான இப்படம் பல்வேறு தரப்புகளிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், யுவராஜ் சிங் இப்படத்தில் நடித்த சோனம் கபூரின் நடிப்பைப் புகழந்து தள்ளியுள்ளனர்.

சச்சின் தெண்டுல்கர் "ஒரு ஹீரோவை மறந்து இந்தபடத்தை உருவாக்கியது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் நடித்திருந்த அனைவரும் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர்.

நீரஜா கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்" என்று கூறியிருக்கிறார். இதேபோல யுவராஜ் சிங் ஒரு துணிச்சலான வீரர் பற்றிய படத்தை திரையிட்டுக் காண்பித்ததற்கு நன்றி.

மொத்தத்தில் நீரஜா தனது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணிப்பவர்" என்று பாராட்டி இருக்கிறார். இருவரின் பாராட்டால் தற்போது சோனம் கபூர் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

English summary
Cricket Players Sachin Tendulkar and Yuvarj Singh Recently Watched Sonam Kapoor's Neerja. Now Both are Appreciates her Acting in Neerja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil