»   »  கலைப்புலி தாணுவை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும்: ஜெ. அன்பழகன்

கலைப்புலி தாணுவை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும்: ஜெ. அன்பழகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து கலைப்புலி எஸ். தாணுவை நீக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ.வும், சினிமா தயாரிப்பாளருமான ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ். தாணு ஒருதலைப்பட்சமாக யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சரத்குமார் அணிக்கு ஆதரவு அளித்து அனைத்து தயாரிப்பாளர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார்.

Anbazhagan

சரத்குமாரை நடிகர் சங்க தேர்தலில் கலைப்புலி எஸ். தாணு ஆதரித்ததற்கான ஒரே காரணம் "எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் நடிகர் சங்கம் போட்டிருந்த ஒப்பந்தத்திற்கும் தாணுவுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம்". அதே போல் தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் சாயம் இருக்க கூடாது, ஆனால் தாணு மூச்சுக்கு மூச்சு தமிழக முதல்வர் பெயரை உச்சரித்து அவரையும் ஏமாற்றி இந்த பதவியில் அமர்ந்து கொண்டு பிரபல நடிகர்களின் கால்சீட்டுகளை வலுக்கட்டாயமாக பெற்று பணம் சம்பாத்தித்து கொண்டிருக்கிறார்.

இவரை போன்ற சுயநல வியாபாரிகள் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எனவே தயாரிப்பாளர்கள் அனைவரும்
ஒருங்கிணைந்து அவரை அப்பதவியிலிருந்து நீக்க ஒரு முடிவு எடுக்க வேண்டும். இது ஆரம்பம் தான், இது தொடர்பாக தயாரிப்பாளர் பலருடன் கலந்து ஆலோசித்து
அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி தயாரிப்பாளர்கள் சங்கம் நடுநிலையுடன் செயல்பட பாடுபடுவேன்.

குறிப்பு:- திரு. தாணு முதலில் தி.மு.க வில் இருந்தார், பிறகு ம.தி.மு.க வுக்கு போனார், இப்போது அ.தி.மு.க வில் இருக்கிறார், நாளை ???

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK MLA J. Anbazhagan wants producer Kalaipuli S. Thanu to be sacked as producers council president.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil