»   »  புலன் விசாரணை 2-க்காக சாகசம் ஆடியோ வெளியீட்டை தள்ளி வைத்த பிரசாந்த்!

புலன் விசாரணை 2-க்காக சாகசம் ஆடியோ வெளியீட்டை தள்ளி வைத்த பிரசாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்ட நாளாகக் கிடப்பிலிருக்கும் புலன் விசாரணை 2 படத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் தயாராகி வருவதால், தனது சாகசம் பட ஆடியோ வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளார் நடிகர் பிரசாந்த்.

மம்பட்டியான் படத்துக்குப் பிறகு பிரசாந்த் நடித்து வரும் படம் சாகசம்.

மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை நடிகரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

தமன் இசையில்

தமன் இசையில்

இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்துப் பாடல்களையும் பிரபல நடிகர் நடிகைகளும் முன்னணிப் பாடகர்களும் பாடியுள்ளனர்.

லட்சுமி மேனன் குரலில்

லட்சுமி மேனன் குரலில்

லட்சுமி மேனன், சிம்பு உள்ளிட்டோர் பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளனர்.

பிரமாண்ட இசை வெளியீடு

பிரமாண்ட இசை வெளியீடு

இந்தப் படத்தின் இசை வெளியீட்டை அடுத்த மாதம் பிரமாண்டமாக மலேசியாவில் அல்லது வேறு இடத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்தார் தியாகராஜன்.

சின்ன மாற்றம்

சின்ன மாற்றம்

ஆனால் இப்போது அதில் சிறு மாற்றம். ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த புலன் விசாரணை 2 படம் விரைவில் வெளியாக உள்ளது.

நின்று போன முயற்சி

நின்று போன முயற்சி

இந்தப் படம் கடந்த 2005-ம் ஆண்டு ஆரம்பமானது. பின்னர் 2008-ல் இந்தப் படத்தை வெளியிட முயன்றனர். ஆனால் அந்த முயற்சி அத்தோடு நின்றுவிட்டது.

மீண்டும் வெளியிட தீவிரம்

மீண்டும் வெளியிட தீவிரம்

இப்போது மீண்டும் படத்தை வெளியிட தீவிரமாக முயன்று வருகின்றனர்.

தள்ளிப் போகும் சாகசம்

தள்ளிப் போகும் சாகசம்

இந்தப் படம் வெளியாவதால், சாகசம் படத்தின் இசை வெளியீட்டை சற்றுத் தள்ளி வைத்துள்ளனர். சாகசம் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது.

English summary
Actor Prashant and Producer Thiagarajan have pushed the audio launch of Sagasam due to the release of long delayed Pulan Visaranai 2.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil