»   »  படமாகிறது சகாயம் ஐ.ஏ.எஸ் வாழ்க்கை.... இயக்கப்போவது ”சாட்டை” சமுத்திரக்கனி!

படமாகிறது சகாயம் ஐ.ஏ.எஸ் வாழ்க்கை.... இயக்கப்போவது ”சாட்டை” சமுத்திரக்கனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயத்தின் வாழ்க்கையை படமாக இயக்க உள்ளார் இயக்குனர் சமுத்திரக்கனி.

தமிழ்நாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் அதிகம் புகழ் பெற்றவர் சகாயம். இவர் மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகளை கண்டுபிடித்தார்.

மேலும் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களை லாபகரமாக மாற்றியிருக்கிறார்.

கிரானைட் முறைகேடு விசாரணை:

கிரானைட் முறைகேடு விசாரணை:

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பல சாதனைகள் படைத்து வரும் சகாயம் தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடுகளை பற்றி ஆராய்ந்து விசாரித்து வருகிறார்.

நிஜ ஹீரோ சகாயம்:

நிஜ ஹீரோ சகாயம்:

சகாயத்தின் துணிச்சலான நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு இளைஞர்கள் இவரை நிஜ ஹீரோவாக பார்க்கின்றனர். இந்நிலையில், இவரது வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் சமுத்திரகனி சினிமாவாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

சுயசரிதை புத்தகம்:

சுயசரிதை புத்தகம்:

சகாயம் தன் சுயசரிதையை புத்தகமாக எழுதி உள்ளார். அந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து சமுத்திரகனி திரைக்கதை எழுதியிருக்கிறார்.

சமுத்திரக் கனியின் இயக்கத்தில்:

சமுத்திரக் கனியின் இயக்கத்தில்:

இதற்கான அனுமதியையும் சகாயத்தை சமீபத்தில் சந்தித்து அவர் பெற்று விட்டதாக தெரிகிறது. "சாட்டை" படத்தை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ இப்படத்தை தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sagayam IAS life story is in on screen soon, may be Samuthirakani directs the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil