»   »  சாகசம் பெயரில் சின்ன மாற்றம்... சாகசம் எனும் வீரச்செயல் ஆனது!

சாகசம் பெயரில் சின்ன மாற்றம்... சாகசம் எனும் வீரச்செயல் ஆனது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரஷாந்த் நடிப்பில் நாளை உலகெங்கும் வெளியாகும் சாஹசம் படத்தின் பெயரில் சிறு திருத்தம் செய்யப்பட்டு, 'சாகசம் எனும் வீரச்செயல்' என்று வெளியாகிறது.

சாஹசம் என்ற பெயர் முழுமையான தமிழில் இல்லை என்ற கருத்து நிலவியதால் தயாரிப்பாளர் தியாகராஜன் இந்த பெயர் மாற்றத்தைச் செய்துள்ளார்.


Sahasam is now Sagasam Ennum Veeracheyal

அருண் ராஜ் வர்மா இயக்கத்தில் பிரசாந்த், அமாண்டா, நாசர், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'சாஹசம்'. பிராசந்த் அப்பா தியாகராஜன் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.


பிப்ரவரி 5ம் தேதி (நாளை) வெளியாகும் இப்படத்தின் தலைப்பில் இப்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


'சாஹசம்' என்ற வார்த்தையில் வடமொழி வார்த்தையான 'ஹ'விற்கு பதிலாக 'க' போடப்பட்டுள்ளது. மேலும், 'என்னும் வீரச்செயல்' என்ற வார்த்தையும் இணைத்து 'சாகசம் என்னும் வீரச்செயல்' என்று தலைப்பிட்டுள்ளனர்.


இப்படத்தைத் தொடர்ந்து பிரபலமான இந்திப் படமான 'ஸ்பெஷல் 26' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார் பிரசாந்த். இப்படத்தையும் தியாகராஜனே தயாரிக்கிறார்.

English summary
Prashant's forthcoming release Saahasam movie title has been changed in Tamil as Sagasam Ennum Veeracheyal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil