»   »  2017-ல் கூகுளில் அதிகம் பிரபலமான இந்தியப் பாடல் இதுதான்!

2017-ல் கூகுளில் அதிகம் பிரபலமான இந்தியப் பாடல் இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'பாகுபலி 2' இந்த வருடம் வெளியாகி மாபெரும் சாதனை செய்த திரைப்படம். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்த இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் எனப் பலரும் நடித்திருந்தனர்.

உலகம் முழுக்க 'பாகுபலி' படம் மட்டுமல்ல, பாடல், கேம்கள், டி.வி ஷோக்கள் என அனைத்தும் ட்ரண்டானது. பாகுபலி சர்வதேச வணிகமாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது.

குழந்தைகளும் 'பாகுபலி' பெயரைக் கேட்டாலே குதூகலமாகும் அளவுக்கு எல்லோர் மனதையும் கவர்ந்திருந்தார் பாகுபலி. ஏப்ரலில் இந்தப் படம் வெளியாகி வசூலிலும் பல சாதனைகளைப் படைத்தது.

கூகுளில் சிறப்பிடம்

கூகுளில் சிறப்பிடம்

இந்நிலையில், கூகுளில் இந்த ஆண்டு அதிகம் பிரபலமான இந்தியப் பாடல் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது 'பாகுபலி' படத்தில் இடம்பெற்ற 'சஹோரே பாகுபலி' என்ற பாடல்.

சஹோரே பாகுபலி

சஹோரே பாகுபலி

சர்வதேச தேடுபொறியான கூகுளில் the most streamed Indian song of the year 2017 என்ற சிறப்பை பெற்று சாதனை படைத்துள்ளது பிரபாஸ், அனுஷ்கா நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்ற சஹோரே பாகுபலி.

கீரவாணி இசை

இப்பாடலை எழுதியவர் சிவசக்தி தத்தா. இசையமைத்தவர் கீரவாணி. யூ-ட்யூபில் வெளியிட்டப்பட்ட அதிகாரப்பூர்வ வீடியோ பாடல் இதுவரை 8 கோடிப் பார்வைகளைக் கடந்திருக்கிறது. அதுபோக, லிரிக்கல் வீடியோவும் தனியாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விருப்பப் பாடல்

விருப்பப் பாடல்

குழந்தைகளின் அழுகையை நிறுத்தக் கூட யூ-ட்யூபில் இந்தப் பாடலை ஓடவிட்டு ரசித்தார்கள் இந்தியர்கள். பிரமாண்ட உருவாக்கத்தால், ரசிகர்களை மகிழ்வித்த பாகுபலிக்கு கூகுளின் இந்தச் சிறப்பு சாதனை பெருமை சேர்த்திருக்கிறது.

English summary
The song 'Sahore Baahubali' in 'Baahubali 2 : the conclusion' is favorite for most of fans. The most streamed Indian song of the year, Google, is the 'Sohore Baahubali'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil