அட அபயங்கரே.. இது அதுல்ல.. ஏ.ஆர். ரஹ்மான் பாட்டையே சுட்டுட்டாரா? கலாய் வாங்கும் கருப்பு பாடல்!

சென்னை: சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகிறது. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்துள்ள கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போ என ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜன நாயகன் மற்றும் பராசக்தி படங்களுடன் போட்டியாக வெளியானால் சிறப்பாக இருக்கும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தீபாவளிக்கு கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. பல்டி, டியூட் படங்களை தொடர்ந்து இந்த படத்துக்கும் சாய் அபயங்கர் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை சூர்யா வெளியிட்ட கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை கேட்ட ரசிகர்கள் அந்த பாடல் ஏ.ஆர். ரஹ்மான் பாடல் போல இருப்பதாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Sai Abhyankkar get roasted after Karuppu first single promo out fans claims its a copycat

மேலும், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் படத்துக்கும் சாய் அபயங்கர் தான் மியூசிக் என்பதால், தயவு செய்து அவரை மாற்றிவிட்டு அனிருத் பக்கம் வந்துடுங்க அட்லீ என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

கருப்பு ஃபர்ஸ்ட் சிங்கிள்: சூர்யா ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கு கருப்பு படம் வெளியாகி தியேட்டர்களில் கொண்டாட்டத்தை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், படத்தின் வேலைகள் இன்னமும் உள்ளதால் தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்யவில்லை என ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார். தீபாவளிக்கு முதல் பாடலையாவது வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த வேண்டும் என சூர்யா முடிவெடுத்துள்ளார். இன்று மாலை கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது.

லிரிக்ஸ் புரியல: தொடர்ந்து சாய் அபயங்கர் போடும் பாடல்கள் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. கட்சி சேர, ஆசை கூட ஆல்பம் பாடல்கள் உலகளவில் ஹிட் அடித்த நிலையில், வரிசையாக 8 படங்களுக்கு மியூசிக் போடும் வாய்ப்பு சாய் அபயங்கருக்கு கிடைத்தது. ஆனால், அவர் போடும் மியூசிக் சிறப்பாக இல்லை என்றும் ஒரே மாதிரியே போடுகிறார் என்றும் பாடல் வரிகள் புரியவில்லை என்றும் தொடர்ந்து சாய் அபயங்கருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.

ஜிங்குச்சா காப்பியா?: லிரிக்ஸ் புரியவில்லை என்றதுமே படக்குழு பாடல் வரிகளை ட்வீட் போட்டுள்ளனர். ஆனால், பாடலை கேட்ட ரசிகர்கள் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கமல்ஹாசன், சிம்பு நடித்த தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற "ஜிங்குச்சா" பாடல் காப்பி போலவே இந்த பாடல் இருக்கு என தற்போது நெட்டிசன்கள் முழுப் பாடலையும் கேட்பதற்கு முன்பே ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இன்று மாலை பாடல் வெளியான பின்னர், நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X