»   »  செல்வா படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்கிறாரா மலர் டீச்சர்?

செல்வா படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்கிறாரா மலர் டீச்சர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரேமம் பட புகழ் சாய் பல்லவியை செல்வராகவனின் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம்.

பிரேமம் மலையாள படத்தில் மலர் டீச்சராக வந்து சேட்டன்களை மட்டும் அல்ல தமிழக ரசிகர்களின் மனங்களையும் மொத்தமாக கொள்ளை கொண்டு போனவர் தமிழ் பெண்ணான சாய் பல்லவி.

Sai Pallavi to act with Santhanam?

சாய் பல்லவியை மலர் டீச்சராக பார்த்து பிக்ஸ் ஆன தமிழ் ரசிகர்களால் தெலுங்கு பிரேமத்தில் ஸ்ருதி ஹாஸனை அந்த கதாபாத்திரத்தில் பார்க்க முடியாமல் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சாய் பல்லவியை தமிழ் படத்தில் ஹீரோயினாக்க முயற்சி நடந்து வருகிறது. செல்வராகவன் சந்தானத்தை ஹீரோவாக வைத்து இயக்கும் படத்தில் அவருக்கு சாய் பல்லவியை ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

Sai Pallavi to act with Santhanam?

சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி ஒத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
If everything goes well, Premam fame Sai Pallavi will make her entry into Kollywood as Santhanam's leady lady in the movie to be directed by Selvaraghavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil