Don't Miss!
- News
சாதாரண ரைஸ் 'ஃப்ரைட் ரைஸாக' மாறிய விசித்திரம்.. குக்கருக்கு அடியில் பார்த்தால் "உவ்வே.."
- Travel
இந்தியாவிலேயே மிக பழமையான நகரம் நம் பூம்புகார் தானாம் – ஆராய்ச்சி கூறுகிறது!
- Technology
மொபைல் சார்ஜிங் நிக்கவே இல்லையா? இதை மட்டும் செய்தால் எப்பவும் Battery Full தான்!
- Sports
அவங்களாம் சுயநலவாதிகள்.. அயல்நாட்டு வீரர்கள் சதி செய்கிறார்களா??.. சுனில் கவாஸ்கர் பரபரப்பு புகார்!
- Finance
வேண்டாம் என அனுப்பிய USA நிறுவனங்கள்.. அமெரிக்காவில் தான் இருப்போம்.. அடம்பிடிக்கும் ஊழியர்கள்!
- Lifestyle
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- Automobiles
கார்களையே தூக்கி சாப்பிடும் வசதி! புதிய ஹோண்டா ஆக்டிவா விலை இவ்ளோதானா! இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டரை பாத்ததே இல்ல!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாகிறாரா சாய் பல்லவி? என்ன லிஸ்ட் பெருசாகிட்டே போகுது!
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் சாய் பல்லவி நடிக்க போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் பாலிவுட் நடிகைகளுடன் நடித்து வந்த நடிகர் அஜித் துணிவு படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் உடன் நடித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்ததாக அஜித்துக்கு ஜோடியாக போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அயலி வெப் சீரிஸ் ட்ரெய்லர் ரிலீஸ்... மார்டன் டிரஸ் பெண்களுக்கு அட்வைஸ் கொடுத்த இயக்குநர் நவீன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்
சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அடுத்து விஜய்சேதுபதியை வைத்து அவர் இயக்கிய நானும் ரவுடி தான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு மீண்டும் விஜய்சேதுபதி உடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்ததாக நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார்.

ஏகே 62
துணிவு படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அஜித் நடிக்கப் போகும் ஏகே 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. சபரி மலைக்கு சென்ற போது கூட அஜித் படம் குறித்த கேள்விகள் தான் விக்னேஷ் சிவனிடம் எழுப்பப்பட்டது. ஆனால், சாமி சரணம் என சொல்லி விட்டு அப்டேட் கொடுக்காமல் எஸ்கேப் ஆகி விட்டார்.

த்ரிஷா இல்லை
தளபதி 67 படத்தில் இணைந்துள்ள நடிகை த்ரிஷா ஏகே 62 படத்திலும் அஜித்துடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தில் த்ரிஷா நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன.

ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ்
ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் பெயரும் அடிபட்டு வந்த நிலையில், அவர்கள் இருவரும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை அஜித் படத்தில் நடிக்காத நிலையில், இந்த படத்தின் வாய்ப்பையும் தவற விட்டுள்ளார் என்கின்றனர்.

சாய் பல்லவி ஜோடியா
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித்தின் ஏகே 62 படத்தில் தமிழ்நாட்டு நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்கவும் பேச்சுக்கள் அடிபட்டு வருவதாக தற்போது லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்தால் சூப்பராத்தான் இருக்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-
Bigg Boss Tamil 6: முதல் முறையா 3 நபர்களும் மேடையில்.. வீட்ல இருந்து எப்படி பறந்து வராங்க பாருங்க!
-
Varisu vs Thunivu: 2வது வாரத்திலும் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளிய வாரிசு.. வசூல் விவரம் இதோ!
-
பிக் பாஸ் குயின்ஸியின் மாமாக்குட்டியான மணிகண்டன்.. ரெண்டு பேரும் செம டான்ஸ்.. தீயாய் பரவும் வீடியோ!