»   »  சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி: அதிர்ச்சியில் இயக்குனர்கள்

சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி: அதிர்ச்சியில் இயக்குனர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சாய் பல்லவியால் கடுப்பாகி இருக்கும் திரையுலகம் ..

சென்னை: சாய் பல்லவி தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.

பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் தமிழ் பெண்ணான சாய் பல்லவி. அவரை கோலிவுட்டில் ஹீரோயினாக்க பல இயக்குனர்கள் முயன்றும் முடியாமல் போனது.

ஒரு வழியாக தற்போது தான் கோலிவுட் பக்கம் வந்துள்ளார்.

தனுஷ்

தனுஷ்

தனுஷின் மாரி 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சாய் பல்லவி. மேலும் செல்வராகவன் சூர்யாவை வைத்து எடுக்கும் படத்திலும் நடிக்கிறார்.

சாய் பல்லவி

சாய் பல்லவி

லட்சங்களில் சம்பளம் வாங்கிய சாய் பல்லவி தற்போது ரூ. 1.5 கோடி கேட்கிறாராம். வளர்ந்து வரும் நடிகையாக இருந்து கொண்டு சாய் பல்லவி சம்பளத்தை உயர்த்தியுள்ளது இயக்குனர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடுப்பு

கடுப்பு

கால்ஷீட் கொடுக்க சாய் பல்லவி ஓவர் பந்தா பண்ணுவதாக அவர் மீது சில இயக்குனர்கள் கடுப்பில் உள்ளனர். சில ஹீரோக்களும் சாய் பல்லவியின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் உள்ளனர்.

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

சாய் பல்லவி ஓவராக சீன் போடுவதாக நடிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாய் பல்லவியின் சேட்டையால் பிரபல தெலுங்கு நடிகர் நானி கடுப்பாகி செட்டில் இருந்து கிளம்பிச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. சாய் பல்லவியை பற்றி நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் அதிகம் வெளி வருகிறது. இது அதுவாக வெளி வருகிறதா கிளப்பி விடுகிறார்களா என்று தெரியவில்லை.

English summary
Buzz is that actress Sai Pallavi has increased her remuneration. She is reportedly asking Rs. 1.5 crore for a movie. Sai Pallavi is busy with tamil and telugu movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil