புஷ்பா 2ம் பாகத்தில் பழங்குடி பெண்ணாக நடிக்கும் சாய்பல்லவி? ஆனால் இதுதான் உண்மையான அப்டேட்
ஐதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பாவிற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில், அதில் சாய் பல்லவி நடிக்கிறாரா இல்லையா என படக்குழு தெரிவித்துள்ளது.

ஆல் ஏரியாவிலும் அடித்து ஆடிய புஷ்ப ராஜ்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் என பெரிய கூட்டணியில் உருவான 'புஷ்பா' படத்தை, சுகுமார் இயக்கியிருந்தார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். செம்மரக் கடத்தலை பின்னணியாகக் கொண்டு ஆக்சன் ஜானரில் வெளியான புஷ்பா, சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் வெளியான புஷ்பாவை, ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதனால், 400 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டியது.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் புஷ்பா 2
புஷ்பா படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியான புஷ்பா டீம், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது பிஸியாக உள்ளனர். அதே கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், புஷ்பா 2வில் விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், பின்னர் அது உண்மையில்லை என தெரியவந்தது. அதேபோல், தற்போது சாய் பல்லவி முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியானது.

பழங்குடியின பெண்ணாக சாய் பல்லவி?
சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய், விராட பர்வம், கார்கி ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனால், புஷ்பா 2வில் அவரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், பழங்குடியின பெண்ணாக முக்கியமான பாத்திரத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின். இதனால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

புஷ்பா டீம் கொடுத்த புது அப்டேட்
இந்நிலையில், புஷ்பா 2வில் சாய் பல்லவி நடிப்பது குறித்து படக்குழு விளக்கம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, 'புஷ்பா 2' படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை என்றும், பழங்குடியின பெண் கேரக்டரில் அவர் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போது அவர் நடிக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











