»   »  விக்ரமுக்கு "மலர் டீச்சர்" கன்பர்ம்ட்?

விக்ரமுக்கு "மலர் டீச்சர்" கன்பர்ம்ட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் புதுப்படத்தில் பிரேமம் புகழ் சாய்பல்லவி நாயகியாக நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. கேரளாவிலிருந்து பல நடிகைகள் வந்து தமிழில் கலக்கிக் கொண்டிருக்கையில், தமிழகத்தில் இருந்து சென்ற சாய் பல்லவி மலையாள ரசிகர்களின் அபிமான நடிகை ஆனார்.

மலர் டீச்சர் என்றாலே அது சாய் பல்லவி தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டீச்சர் டாக்டர் ஆனார்...

டீச்சர் டாக்டர் ஆனார்...

ஆனால், தொடர்ந்து வந்த பட வாய்ப்புகளை ஏற்காமல் மருத்துவம் படிக்க ஜார்ஜியா பறந்தார் சாய் பல்லவி. தற்போது படிப்பை முடித்து அவர் டாக்டரும் ஆகி விட்டார்.

மணிரத்னம் படவாய்ப்பு...

மணிரத்னம் படவாய்ப்பு...

இதற்கிடையே அவரை தமிழில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். முதலில் மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தில் சாய்பல்லவி நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.

களி...

களி...

ஆனால், திடீரென்று ஸ்கிரிப்ட் மாற்றியதால் அப்படத்தில் நடிக்காமல் ஒதுங்கினார். இடையில் களி என்ற மலையாளப் படத்தில் மட்டும் துல்கர் ஜோடியாக நடித்தார் சாய் பல்லவி.

விக்ரம் படம்...

விக்ரம் படம்...

இந்நிலையில், வாலு படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக படக்குழுவினர் அவரிடம் பேசி வருவதாகத் தெரிகிறது.

ஓகே சொல்வாரா...?

ஓகே சொல்வாரா...?

மலரே, மலரே என புலம்பிக் கொண்டிருக்கும் தமிழ் ரசிகர்கள் எப்போது அவர், நேரடி தமிழ் படத்தில் நடிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். விக்ரம் படத்திற்காவது அவர் ஓகே சொல்வாரா இல்லை ஏதாவது காரணம் சொல்லி நழுவுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
Vikram’s next will be directed by Vaalu fame, Vijay Chander. There are rumors doing the rounds that Sai Pallavi has been roped in to play the female lead for this commercial entertainer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil