»   »  இதுக்குத்தான் இத்தனை நாளா காத்திருந்தாராம் சாய் பல்லவி!

இதுக்குத்தான் இத்தனை நாளா காத்திருந்தாராம் சாய் பல்லவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கரு'. பெண்ணை மையப்படுத்திய இந்தக் கதையில், சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

'பிரேமம்' படத்தின் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். இதுதான் சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் படம்.

முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

சாய் பல்லவி

சாய் பல்லவி

'பிரேமம்' மலையாளப் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தமிழ் நடிகை சாய் பல்லவி. தமிழில் அறிமுகமாக மிகவும் தாமதம் செய்து வந்தார். பல இயக்குனர்கள் அவரைத் தொடர்பு கொண்டு நடிக்கக் கேட்டபோதும் நடிக்க மறுத்தார். அதேசமயம் தெலுங்கிலும் சில படங்களிலும் நாயகியாக நடித்து விட்டார்.

கரு

கரு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்திருக்கும் திரைப்படம் 'கரு'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள 'கரு' படத்தில், நாக செளரியா சாய் பல்லவியின் கணவராக நடித்துள்ளார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

சாய் பல்லவி தமிழில் நாயகியாக அறிமுகமாகும் 'கரு' படம் அபார்ஷனை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது தமிழில் அறிமுகமாக தாமதம் ஆனது ஏன் என்பது குறித்து பேசினார்.

எப்போது நடிப்பீர்கள்

எப்போது நடிப்பீர்கள்

"பிரேமம் படத்தில் நடித்த பிறகு எங்கே போனாலும் தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். கரு படத்தின் கதையைப் போல ஒரு கதைக்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன். படத்தில் பேபி வெரோனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் போட்டி போட்டு பல காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது" என்றார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய்

இயக்குநர் ஏ.எல்.விஜய்

இயக்குநர் விஜய் பேசும்போது, "கரு படம் கமிட்டானபோது, அதில் வேறு ஒரு குழந்தையை தான் நடிக்க வைத்தோம். அவரை வைத்து தான் கரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால் கடைசியில் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

பேபி வெரோனிகா

பேபி வெரோனிகா

அதன்பின்னர் விளம்பரம் ஒன்றில் பேபி வெரோனிகாவை பார்த்து இந்தப்படத்தில் நடிக்க வைத்தோம். இந்த விஷயம் சாய் பல்லவிக்கே தெரியாது. இப்போது தான் சொல்கிறேன் எனக் கூறினார். சாய் பல்லவி தமிழில் பேசியதை விடவும் ஆங்கிலத்தில் தான் அதிகம் பேசியிருக்கிறார்.

English summary
Sail pallavi starrer 'Karu' movie directed by AL Vijay. The music launch event of 'Karu' was held today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil