சாய் பல்லவி, அனிருத், எஸ்ஜே சூர்யா, சாண்டி மாஸ்டருக்கு கலைமாமணி விருது.. இத்தனை பேரும் அசத்தல்!

சென்னை: தமிழக அரசு 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. இயல், இசை, நாடகம் ஆகிய கலைப்பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகள், பல்வேறு கலைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளன. முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகளை வழங்குவார்.

நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, மணிகண்டன், விக்ரம் பிரபு, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன், சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், மற்றும் பாடலாசிரியர் விவேகா ஆகியோரும் இந்த விருதை பெற உள்ளனர்.

Sai Pallavi Manikandan Anirudh will receive Kalaimamani Awards soon a complete list

2023 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது, திரைப்பட குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இசையமைப்பாளர் அனிருத், திரைப்பட நடனக் கலைஞர் சாண்டி (சந்தோஷ்குமார்) மற்றும் முனைவர் ந. முருகேச பாண்டியன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு, கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதுகளைப் பெறும் கலைஞர்களுக்கு மூன்று சவரன் தங்கப் பதக்கமும், ஒரு சிறப்புப் பட்டயமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டிற்கான திரைப்பட இயக்குநர் விருது லிங்குசாமிக்கு வழங்கப்படுகிறது. அதே ஆண்டுக்கான சிறந்த திரைப்பட நடிகருக்கான விருது மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாய் பல்லவிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட நடிகை விருது வழங்கப்பட உள்ளது.

2021-ஆம் ஆண்டிற்கான நாடக நடிகர் விருது பூச்சி முருகனுக்குக் கிடைத்துள்ளது. 2022-ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது நடிகை ஜெயாவிற்கும், விக்ரம் பிரபுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேகா 2022-ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதைப் பெறுகிறார்.

சாய் பல்லவி, மணிகண்டன், அனிருத்துக்கு விருது: 2023-ஆம் ஆண்டிற்கான திரைப்பட நடிகருக்கான விருது மீண்டும் நடிகர் மணிகண்டனுக்கு வழங்கப்படுகிறது. குணச்சித்திர நடிகருக்கான கலைமாமணி விருது ஜார்ஜ் மரியானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் 2023-ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதைப் பெறுகிறார்.

நடன இயக்குநர் சாண்டிக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் அதே ஆண்டுக்கான கலைமாமணி விருதைப் பெறுகிறார். இசையமைப்பாளர் அனிருத்துக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குவியும் வாழ்த்து: இதேபோல், பாரதியார் விருது முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ். சுப்புலட்சுமி விருது யேசுதாஸுக்கும், பால சரஸ்வதி விருது முத்து கண்ணம்மாளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், எழுத்தாளர் க. திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, மற்றும் சமயச் சொற்பொழிவாளர் எஸ். சந்திரசேகர் ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது. முன்னாதக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சாய் பல்லவி, எஸ்.ஜே. சூர்யா, அனிருத், மணிகண்டன் மற்றும் சாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலைமாமணி விருது பெற உள்ள நிலையில், வாழ்த்துகள் குவிந்து வருகிறது. மக்கள் தொடர்பு பிரிவில் நிகில் முருகன், டைமண்ட் பாபுவுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X